News November 12, 2025

தென்காசியில் சிறப்பு அரசு பள்ளிகள் தேர்வு

image

தமிழக கல்வித் துறை சார்பாக 2024-2025ம் ஆண்டிற்கான மாவட்ட அளவில் சிறந்த பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இதில் தென்காசி மாவட்டத்திற்கு உட்பட்ட கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, செங்கோட்டை அரசு தொடக்கப்பள்ளி மற்றும் நெடுவயல் சிவசைல நாதா நடுநிலைப்பள்ளி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. நவம்பர் 14 பள்ளி கல்வித்துறை அமைச்சரால் விருது வழங்கப்பட உள்ளது.

Similar News

News November 12, 2025

தென்காசி கம்மி விலைக்கு பைக், கார் வேணுமா??

image

தென்காசி காவல் நிலைய எல்கைக்குட்பட்ட பகுதிகளில் உரிமை கோரப்படாத நிலையில் இருந்து வரும் 93 இருசக்கர மோட்டார் வாகனங்கள், 02 மூன்று சக்கர மோட்டார் வாகனங்கள் மற்றும் 02 நான்கு சக்கர மோட்டார் வாகனங்கள் என மொத்தம் 97 மோட்டார் வாகனங்களுக்கான பொது ஏலம் 20.11.2025 ம் தேதி காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை தென்காசி I.C.I அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் வைத்து நடைபெற உள்ளது. SHARE!

News November 12, 2025

தென்காசி: இலவச மரக்கன்றுகள் வேணுமா??

image

சிவகிரி வனச்சரக உட்பட்ட சிவகிரி, சங்கரன்கோவில், திருவேங்கடம் வட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், தனியார் பள்ளிகள், மருத்துவமனைகள், கல்லூரிகள், கோவில்கள், தனியார் பட்டா விவசாய நிலங்கள் உள்ளிட்ட இடங்களில் நட வேங்கை, தேக்கு, ஈட்டி, மகாகனி, வேம்பு, புங்கன் ஆகிய மரக்கன்றுகள் பெற ஆதார், வங்கிகணக்கு, பட்டா, 10(1) அடங்கல் ஆகிய நகல் கொடுக்கவும். தொடர்பு சிவகிரி வனச்சரக அலுவலர்
9629089469, 7904523216

News November 12, 2025

தென்காசி கிணற்றில் கிடந்த பச்சிளம் குழந்தை

image

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே மகேந்திரவாடி கிராமத்தில் பிறந்து சில தினங்களே ஆன பச்சிளம் குழந்தை இன்று உயிரிழந்த நிலையில் கிணற்றில் மிதந்தது.
இதனை பார்த்த அருகில் இருந்தவர்கள் அய்யாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து குழந்தை உடலை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!