News November 12, 2025
கூண்டோடு கட்சியில் இணைந்தனர்

கடந்த செப்டம்பரில் ‘நமது மக்கள் முன்னேற்ற கழகம்’ (NMMK) என்ற புதிய கட்சியை தொடங்கி மாநிலம் முழுவதும் பி.எல்.ஏ.ஜெகநாத் மிஸ்ரா பரப்புரை மேற்கொண்டு வருகிறார். நேற்று மாலை சேலத்தில் நடந்த நிகழ்ச்சியில், 1000-க்கும் மேற்பட்ட மாற்றுக்கட்சியினர் NMMK-வில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதன்பின் பி.எல்.ஏ.ஜெகநாத் பேசுகையில், ஒத்த கருத்துடைய கட்சியுடன் இணைந்து 2026 தேர்தலை சந்திப்போம் என தெரிவித்தார்.
Similar News
News November 12, 2025
30 ஆண்டுகளில் இயற்கை பேரிடர்களால் 80,000 பேர் பலி

கடந்த 30 ஆண்டுகளில் இந்தியாவில் இயற்கை பேரிடர்களால் 80,000 பேர் பலியானதாக ‘The Climate Risk Index’ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலகில் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியா ஒன்பதாவது இடத்தில் உள்ள நிலையில், டொமினிகா, மியான்மர், ஹோண்டுராஸ் ஆகிய நாடுகள் முதல் 3 இடத்தில் உள்ளன. மேலும், 1995 முதல் 430 பேரழிவுகளால் 130 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
News November 12, 2025
‘தற்குறி’ என சொல்லாதீங்க: எழிலன்

ஒரு சாராரை ‘தற்குறி’ என திமுகவினர் விமர்சிக்கின்றனர். இந்நிலையில், ‘தற்குறிகள்’ என விமர்சனம் செய்வது தவறான அணுகுமுறை என்று திமுக MLA எழிலன் தெரிவித்துள்ளார். நாம் அவர்களிடம் அரசியல் ரீதியாக பேசவில்லை, உரையாடவில்லை; அது நம்முடைய தவறு என்று கூறினார். மேலும், அவர்கள் சங்கிகள் கிடையாது; அவர்களிடம் அரசியல் ரீதியாக பேசினால்தான் போலியான தலைவர்களைப் பற்றி உணர்வார்கள் எனவும் ஆலோசனை வழங்கினார்.
News November 12, 2025
CSK அணி 6 வீரர்களை கழட்டி விட திட்டம்

நவம்பர் 15-ம் தேதிக்குள் IPL அணிகள் தக்கவைப்படும் வீரர்களின் பட்டியலை அறிவிக்க வேண்டும். இதனால் அந்த பட்டியலை தயார் செய்யும் பணியில் அனைத்து அணிகளும் தீவிரமாக உள்ளன. இதனிடையே CSK அணி டிரேட் மூலம் சஞ்சுவை வாங்க உள்ள நிலையில், 6 வீரர்களை அணியில் இருந்து விடுவிக்க திட்டமிட்டுள்ளது. அதன்படி, கான்வே, திரிபாதி, ஹூடா, ராமகிருஷ்ண கோஷ், குர்ஜப்னீத் உள்ளிட்டோரை விடுவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


