News November 12, 2025
கள்ளக்குறிச்சி: சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்கான சம்மர் கேம்ப்

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில், இன்று (நவ.12) பள்ளிக்கல்வித்துறை சார்பாக ஈக்கோ பிரண்ட்லி சம்மர் கேம்ப் நடைபெறுகிறது. கோமுகி அணை பகுதியில் பிளாஸ்டிக் பொருட்களை நீக்குதல், சுற்றுச்சூழல்கள் பற்றிய விழிப்புணர்வு பேனர் பெயிண்டிங் போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற இருக்கின்றது. இதன் மூலம் பள்ளி மாணவர்களிடையே சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தப்படும்.
Similar News
News November 12, 2025
கள்ளக்குறிச்சியில் இலவச எலக்ட்ரீசியன் பயிற்சி!

கள்ளக்குறிச்சி இளைஞர்களே.., உங்களுக்கான ஓர் அரிய வாய்ப்பு. தமிழக அரசின் ‘வெற்றி நிச்சயம்’ திட்டத்தின் மூலம் இலவச ‘வீட்டு உபயோகப் பொருட்கள் எலக்ட்ரீசியன்’ பயிற்சி நமது மாவட்டத்தில் வழங்கப்படுகிறது. இதற்கு 8ஆவது படித்திருந்தால் போதுமானது. பயிற்சியுடன் சேர்த்து ஊக்கத்தொகையும் வழங்கப்படும். இதுகுறித்து விவரங்கள் அறிய, விண்ணப்பிக்க <
News November 12, 2025
கள்ளக்குறிச்சி: ஊராட்சி மன்ற தலைவரை காணவில்லை!

கள்ளக்குறிச்சி அடுத்த மலைக்கோட்டலாம் கிராமத்தில், ஊராட்சி மன்ற தலைவரை காணவில்லை என போஸ்டர் ஒட்டி அந்த வழியாக சென்ற அரசு பேருந்தை சிறைபிடித்தனர். இந்நிலையில் இன்று (நவ.12) கிராம இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் தற்போது பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.
News November 12, 2025
கள்ளக்குறிச்சி: பரோடா வங்கியில் 159 காலியிடங்கள்!

கள்ளக்குறிச்சி மாவட்ட பட்டதாரிகளே.., பேங் ஆஃப் பரோடா வங்கி 2700 ஆலிப் பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் மட்டும் 159 காலிப்பணியிடங்கள் உள்ளன. இதற்கு ஏதேனும் ஓர் டிகிரி முடித்திருந்தால் போதுமானது. விண்ணப்பிக்க டிச.1ஆம் தேதியே கடைசி நாள். விருப்பமுள்ளவர்கள் இங்கே கிளிக் பண்ணுங்க. இந்தத் தகவலை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


