News November 2, 2025
தென்காசி: இளைஞர் தற்கொலையில் 2 பேர் கைது

தென்காசி பாறையடி தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (23). இவரும், 17 வயது மாணவியும் காதலித்து வந்த நிலையில் மாணவியின் பெற்றோர் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். நேற்று முந்தினம் மாணவியின் உறவினர்கள் 2 பேர் சிவசுப்பிரமணியனின் வீட்டிற்கு சென்று தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சிவசுப்பிரமணியன் தற்கொலை செய்து கொண்ட நிலையில் மாணவியின் உறவினர் 2 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைந்தனர்.
Similar News
News December 7, 2025
தென்காசி: ஆதார் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு.. FREE

தென்காசி மக்களே ஆதார் கார்டில் இனி நீங்களே உங்களது முகவரியை அப்டேட் செய்யலாம்
1.<
2.அப்டேட் பகுதியில் ‘ADDRESS UPDATE’ என தேர்ந்தெடுங்க
3.அதில், உங்களது புதிய முகவரியை பதிவிடவும்
4.முகவரிக்கான ஆதாரங்களை பதிவேற்றம் செய்யவும்
5.புதிய முகவரியை அப்டேட் செய்ய ஜூன் 2026 வரை இலவசம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் உடனே SHARE பண்ணுங்க
News December 7, 2025
தென்காசியில் அப்ரண்டீஸ் மேளா.. கலெக்டர் அறிவிப்பு

தென்காசி மாவட்டத்தின் பயிற்சி அலுவலகத்தின் சார்பாக பிரதம மந்திரி தேசியத் தொழில் பழகுனர் அப்ரண்டீஸ் மேளா, தென்காசி அரசு தொழில் பயிற்சி நிலையத்தின் சேர்க்கை முகாம் நாளை (திங்கட்கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது. பயிற்சி காலத்தில் மாதந்தோறும் உதவித்தொகை ரூ.9,600 முதல் ரூ.12,500 வரை வழங்கப்படும். இந்த தகவலை தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் தெரிவித்துள்ளார்.
News December 7, 2025
தென்காசி: கரண்ட் கட்.? இனி Whatsapp மூலம் தீர்வு

தென்காசி மாவட்டத்தில் உங்கள் பகுதியில் ஆபத்தான வகையில் உள்ள பழுதடைந்த மின்கம்பங்கள், மின்கம்பிகள், திடீர் கரண்ட் கட் உள்ளதா? இது குறித்து மின்வாரியத்திடம் WhatsApp மூலமாக எளிதில் புகார் அளிக்கலாம். 89033 31912 என்ற எண்ணின் வாயிலாக மேற்கண்ட புகார்களை எவ்வித அலைச்சலும் இல்லமால் போட்டோவுடன் புகாரளிக்கலாம். அவசர உதவிக்கு – 94987 94987 என்ற எண்ணையும் அழைக்கலாம். இத்தகவலை எல்லோருக்கும் SHARE பண்ணுங்க


