News November 2, 2025

சிக்கன், முட்டை விலை நிலவரம்!

image

ஞாயிற்றுக்கிழமையான இன்று(நவ.2) நாமக்கல் மண்டலத்தில் சிக்கன், முட்டை விலை மாற்றமின்றி விற்பனையாகிறது. மொத்த விலையில் கறிக்கோழி 1 கிலோ ₹106, முட்டைக்கோழி 1 கிலோ ₹108-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரத்தில் ஏறுமுகத்திலிருந்த முட்டை, இந்த வாரத்தில் ₹5.40 ஆகவே நீடிக்கிறது. சென்னையில் 1 கிலோ கோழிக்கறி ₹160 முதல் ₹200 வரை விற்பனையாகிறது. உங்கள் ஊரில் சிக்கன் விலை என்ன? கமெண்ட்ல சொல்லுங்க.

Similar News

News November 3, 2025

கார்த்திகாவிற்கு 100 சவரன் நகை பரிசு: மன்சூர் அலிகான்

image

ஆசிய கபடி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடி தங்கம் வெல்ல காரணமாக விளங்கிய ‘கண்ணகி நகர்’ கார்த்திகாவை, மன்சூர் அலிகான் நேரில் சந்தித்து ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கியுள்ளார். மேலும், ஒலிம்பிக்கில் இந்திய அணிக்காக களமிறங்கி தங்கம் வென்றால், கார்த்திகாவின் திருமணத்திற்கு 100 சவரன் நகையை பரிசாக அளிப்பதாகவும் உறுதியளித்துள்ளார். அவரது இந்த செயலை நெட்டிசன்கள் பலரும் பாராட்டி வருகின்றனர்.

News November 3, 2025

அவலத்தை திசைதிருப்ப அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக

image

ஊழல் மாடல் ஆட்சியின் அவலத்தை திசைதிருப்பவே அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டதாக தவெகவின் அருண்ராஜ் விமர்சித்துள்ளார். நேற்று வேலைவாய்ப்பில் ஊழல், இன்று மணல் கொள்ளையில் மவுனம், திமுகவின் கபட நாடகத்தை தமிழக மக்கள் விழிப்போடு கவனித்துக் கொண்டு இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், 2026-ல் மக்கள் நிச்சயம் திமுகவிற்கு தகுந்த பாடத்தை புகுட்டி வீட்டுக்கு அனுப்புவது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.

News November 3, 2025

ராசி பலன்கள் (03.11.2025)

image

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.

error: Content is protected !!