News November 2, 2025
சனி பகவானின் கோபத்துக்கு ஆளாகாமல் இருக்க..

வாஸ்து சாஸ்திரத்தின்படி, வீட்டில் சில பொருள்களை வைக்கக்கூடாது. ➤துருப்பிடித்த பொருள்களை தூக்கி எரியுங்கள் ➤வீட்டின் மாடியை அழுக்காக வைத்திருக்க வேண்டாம் ➤பழைய பொருள்களை, அழுக்கான பொருட்களை வீட்டிற்குள் வைக்காதீங்க. இவற்றை வைத்திருந்தால் சனி பகவானின் கோபத்துக்கு ஆளாவீர்கள் எனவும், வீட்டில் உள்ளவர்களுக்கு எதிர்மறையான எண்ணங்கள் உருவாகும் என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றன.
Similar News
News November 3, 2025
லெஜெண்ட்ஸ் பட்டியலில் ஹர்மன்பிரீத் கவுர்

அதிக வயதில் மகளிர் உலகக் கோப்பையை வென்ற கேப்டன் என்ற பெருமையை ஹர்மன்பிரீத் கவுர் பெற்றுள்ளார். அவருக்கு வயது 36 வருடம் 239 நாட்களாகும். இந்த வெற்றியின் மூலம் உலகக் கோப்பையை பெற்றுத் தந்த இந்திய லெஜெண்ட்களின் பட்டியலிலும் அவர் இணைந்துள்ளார். கபில் தேவ் (1983 ODI), தோனி (2007 டி20, 2011 ODI), ரோஹித் (2024 டி20) ஆகியோர் தலைமையில் இந்தியா உலகக் கோப்பைகளை வென்று இருக்கிறது.
News November 3, 2025
இந்திய அணியின் வெற்றிப் பாதை

52 வருட மகளிர் உலகக் கோப்பை வரலாற்றில் இந்தியா முதல் முறையாக சாம்பியன் ஆகியுள்ளது. குரூப் ஸ்டேஜில் இலங்கை, பாகிஸ்தான், நியூசிலாந்திற்கு எதிராக வெற்றியும், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்திற்கு எதிராக தோல்வியும் கண்ட இந்திய அணி புள்ளி பட்டியலில் 4-வது இடமே பிடித்து அரையிறுதிக்கு முன்னேறியது. இந்த தொடரில் இந்திய அணியின் வெற்றிப் பாதையை போட்டோக்களாக தந்துள்ளோம். SWIPE செய்து பார்க்கவும்.
News November 3, 2025
ஆனந்த கண்ணீரில் ரோஹித் சர்மா

மகளிர் உலகக் கோப்பை இறுதிப்போட்டியை ஹிட்மேன் ரோஹித் சர்மா நேரில் கண்டுகளித்தார். தென்னாப்பிரிக்க அணியின் இறுதி விக்கெட் விழுந்ததும் ரோஹித் சர்மா எழுந்து நின்று கைத்தட்டி வீராங்கனைகளை உற்சாகப்படுத்தியதோடு மட்டுமின்றி, அவர்களின் மகிழ்ச்சியான தருணங்களை பார்த்து ஆனந்த கண்ணீர் வடித்தார். 2023 உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் ரோஹித் தலைமையிலான இந்திய அணி, ஆஸ்திரேலியா அணியிடம் தோற்றிருந்தது.


