News November 2, 2025

மாரி செல்வராஜுக்கு எதிராக பொங்கிய ஆராத்யா

image

மாரி செல்வராஜின் படங்களில் தமிழ் நடிகைகளை நடிக்க வைப்பதில்லை என்ற விமர்சனம் எழுந்தது. இதற்கு, டெடிகேட்டிவான ஆர்ட்டிஸ்டை தான் நான் எடுப்பேன், அது மலையாளி என்றால் கூட பிரச்சனையில்லை என மாரி விளக்கம் கொடுத்திருந்தார். இதற்கு கண்டனம் தெரிவித்த நடிகை ஆராத்யா, தமிழ் சினிமாவிலும் அர்ப்பணிப்புள்ள நடிகைகள் உள்ளோம், எங்களுடைய உழைப்பு உங்கள் கண்களுக்கும், காதுகளுக்கும் வந்துசேரவில்லையா என கேட்டுள்ளார்.

Similar News

News November 2, 2025

நகை கடன்.. முக்கிய அறிவிப்பு

image

தங்கத்தை போன்று வெள்ளியை அடகு வைத்தும் கடன் பெறும் வசதி 2026 ஏப்ரலில் இருந்து நடைமுறைக்கு வரும் என ரிசர்வ் வங்கி அண்மையில் அறிவித்தது. இதில் முக்கிய அம்சமாக, கடனை திருப்பி செலுத்திய பிறகு அடகு வைத்த பொருள்களை உடனடியாக வாடிக்கையாளரிடம் ஒப்படைக்க வேண்டும். தாமதம் செய்தால், ஒவ்வொரு நாளைக்கும் ₹5,000 அபராதம் செலுத்தி வாடிக்கையாளரிடம் நகையை ஒப்படைக்க வேண்டும் என வங்கிகளுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

News November 2, 2025

பிரபல நடிகர் பங்கஜ் திரிபாதி தாயார் காலமானார்

image

பிரபல பாலிவுட் நடிகர் பங்கஜ் திரிபாதியின் தாயார் ஹேம்வந்தி தேவி (89) காலமானார். உடல்நலக் குறைவால் அவர் காலமானதாகவும், நேற்று அவரது இறுதிச் சடங்குகள் நிறைவடைந்ததாகவும் பங்கஜ் தரப்பில் கூறப்பட்டுள்ளது. பாலிவுட்டில் முக்கிய நடிகராக விளங்கும் பங்கஜ் தமிழில் காலா படத்தில் போலீஸ் SI கதாபாத்திரத்தில் நடித்தவர். இவரின் மிர்ஸாபூர் சீரிஸும் தமிழ் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது.

News November 2, 2025

தினமும் பாதாம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

image

பாதாமில் ஆரோக்கியமான கொழுப்புகள், ஆக்ஸிஜனேற்றிகள், அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் நிறைந்துள்ளன. தினமும் ஒரு கைப்பிடி பாதாம் சாப்பிடுவதால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கும். அவை என்னென்ன என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. இதேபோல், உங்களுக்கு தெரிந்த பாதாம் நன்மைகளை கமெண்ட்ல சொல்லுங்க.

error: Content is protected !!