News November 2, 2025
மீண்டும் புயல் சின்னம்.. மழை பொளந்து கட்டும்

வங்கக் கடலில் நாளை(நவ.2) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக இருப்பதாக IMD கணித்துள்ளது. இன்று நாகை, திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் மிதமான மழை பெய்தது. இந்நிலையில், நாளை முதல் நவ.7-ம் தேதி வரை தமிழகத்தில் பரவலாக மழை பெய்யக்கூடும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, சென்னையில் 2 நாள்களுக்கு மழைக்கு வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதனால், வெளியே செல்பவர்கள் குடையை மறக்க வேண்டாம்!
Similar News
News November 2, 2025
4 ராசிகளுக்கு பண மழை கொட்டும்

ஜோதிட கணிப்பின்படி, செவ்வாய் – புதன் சேர்க்கை நிகழ்ந்திருப்பதால் 4 ராசியினருக்கு அதிர்ஷ்டம் கொட்டுமாம். *கடகம்: நிதி நிலை உறுதியாகும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் அமையும். *விருச்சிகம்: தொழிலில் முன்னேற்றம். எடுக்கும் முடிவுகளில் வெற்றி கிடைக்கும். *மகரம்: நிதி சார்ந்த பலன்கள் அதிகரிக்கும். வருமானம் உயர வாய்ப்பு. *மீனம்: வெளிநாடு வாய்ப்புகள் வரலாம். சவால்கள் இருந்தாலும் வெற்றி நிச்சயம்.
News November 2, 2025
₹2,000 நோட்டுகள்.. ரிசர்வ் வங்கி முக்கிய தகவல்

₹2,000 நோட்டுகள் குறித்து ரிசர்வ் வங்கி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. ₹5,817 கோடி மதிப்பிலான ₹2,000 நோட்டுகள் வங்கிகளுக்கு இன்னும் திரும்பவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. உங்களிடம் ₹2,000 நோட்டு இருந்தால் RBI சென்னை அலுவலகத்தில் கொடுத்து மாற்றலாம். அடையாள அட்டை உள்ளிட்டவற்றுடன் சென்று பணத்தை டெபாசிட் செய்யலாம். தபால் நிலையம் மூலமும் RBI-க்கு ₹2000 நோட்டுகளை அனுப்பலாம். SHARE IT
News November 2, 2025
அசுரவேகத்தில் முடி வளர மூலிகை எண்ணெய்!

➤உரலில் சடாமாஞ்சில் வேர், வெந்தயம் மற்றும் கறிவேப்பிலையை இடித்து கொள்ளவும் ➤கடாயில் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் விட்டு, அரைத்த பொடியை போட்டு, பிரிங்கராஜ் தூளை சேர்க்கவும் ➤20 நிமிடங்கள் வறுத்து, எண்ணெய்யை வடிகட்டி கிளாஸ் பாட்டிலில் ஊற்றுங்கள் ➤வாரத்திற்கு 2 முறை முடியின் வேர்க்கால்களில் தேய்த்து, மசாஜ் செய்துவர முடி உதிர்வு குறையும். பலருக்கு பயனளிக்கும் SHARE THIS.


