News November 1, 2025
புதுச்சேரி: ஆளுநர் மாளிகையில் உதயநாள் விழா

புதுச்சேரி, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் உதயநாள் விழா ஆளுநர் மாளிகையில் இன்று கொண்டாடப்பட்டது. துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், முதலமைச்சர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர் நமச்சிவாயம், சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜவேலு, ஆறுமுகம் ஆகியோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து மாநிலங்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
Similar News
News November 3, 2025
புதுச்சேரி: மாநில செயலாளர் பேட்டி

புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த மாநில செயலாளர் அன்பழகன், கடந்த தேர்தலில் பணம் கொடுத்து வாக்கு பெற்று வெற்றி பெற்ற முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமியும், திமுக மாநில அமைப்பாளர் சிவாவும், இலவசத்தை பற்றி பேச எந்த தகுதியும் இல்லை என்று விமர்சனம் செய்த அவர். மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை செய்யும் அரசியல் கட்சிகள் மற்றும் பொதுநலவாதிகளை ஒருபோது கொச்சைப்படுத்தக் கூடாது என்றார்.
News November 2, 2025
புதுச்சேரி: ரூ.56,900 சம்பளத்தில் அரசு வேலை!

மத்திய அரசு சுங்கத் துறையில் காலியாக உள்ள 22 கேண்டீன் உதவியாளர் பணிகளை நிரப்ப அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதற்கு 10th போதுமானது. சம்பளம் மாதம் ரூ.18,000 முதல் ரூ.56,900 வரை வழங்கப்படும். ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் 16.11.2025 தேதிக்குள்<
News November 2, 2025
புதுச்சேரி பாண்டி மெரினாவில் வாலிபர் கொலை

புதுச்சேரியில் சமீப காலங்களாக கொலைவெறி தாக்குதல் அதிகரித்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக புதுச்சேரி வம்பா கீரப்பாளையம் பாண்டி மெரினா விற்கு செல்லும் வழியில் 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். இதனை அறிந்த புதுச்சேரி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பிரேதத்தை கைப்பற்றி வழக்குப் பதிந்து கொலைக்கான காரணத்தை விசாரித்து வருகின்றனர்.


