News November 1, 2025
மகளின் நினைவாக இளையராஜா புதிய அறிவிப்பு

மறைந்த தனது மகள் பவதாரிணியின் நினைவாக ‘பவதா கேர்ள்ஸ் ஆர்கெஸ்ட்ரா’ என்ற பெண்களுக்கான ஆர்கெஸ்ட்ராவை இளையராஜா தொடங்கியுள்ளார். இசைத்துறையில் திறமையை வளர்த்துக் கொள்ள விரும்பும் பெண்கள், இதில் பதிவு செய்யலாம் என்றும் அவர் அறிவித்துள்ளார். முன்னதாக, 15 வயதிற்குட்பட்ட சிறுமிகளுக்கு ஆர்கெஸ்ட்ரா தொடங்க இருப்பதாக அறிவித்து இருந்தார். கேன்சர் காரணமாக பவதாரிணி கடந்தாண்டு உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 2, 2025
JCB மஞ்சள் நிறத்தில் இருப்பது ஏன்?

முன்னதாக, சிவப்பு, வெள்ளை நிறங்களில்தான் JCB-கள் தயாரிக்கப்பட்டன. ஆனால், தூரத்தில் இருந்து பார்க்கும்போது இவை கண்களுக்கு புலப்படாது என்பதால் விபத்துகள் நேரலாம். எனவே, பாதுகாப்பு காரணங்களுக்காக JCB வாகனங்கள் மஞ்சள் நிறத்தில் தயாரிக்கப்படுகின்றன. ரோட்டில் இவை எங்கே நின்றாலும், மஞ்சள் நிறம் எளிதில் கண்களில் பட்டுவிடும். வாகன ஓட்டிகளும் கவனமாக இருப்பர். JCB புடிக்கும்னா இத்தகவலை SHARE பண்ணுங்க.
News November 2, 2025
வானத்தை வைத்து மேஜிக் காட்டிய நபர்!

2020 உலகமே லாக்டவுனில் வானத்தை பார்த்த படி மல்லாந்து படுத்திருந்தது. அப்படி வானத்தை பார்த்து கொண்டிருந்த கிறிஸ் ஜட்ஜ் என்பவருக்கு பயங்கரமான கிரியேட்டிவிட்டி உருவாகியுள்ளது. மேக கூட்டங்களை வெவ்வேறு உருவங்களாக வரைந்து காட்டி, உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தி விட்டார். அவரின் கைவண்ணத்தை மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்து பாருங்க.
News November 2, 2025
6, 6, 6, 4, 4, 4, 4… மிரட்டல் அடி

வென்றாக வேண்டும் என்ற கட்டாயத்தில் இன்று களமிறங்கிய இந்திய அணியை தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தர் தனது அதிரடியால் கரை சேர்த்தார். 6-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சுந்தர், 23 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 49 ரன்களை விளாசினார். இதில், அவர் ஒரே ஓவரில் 4,6,6 விளாசி, ரசிகர்களை குதூகலத்தில் ஆழ்த்தினார். சுந்தரின் மிரட்டலான ஆட்டத்தை யாரெல்லாம் லைவ்வாக பார்த்தீங்க?


