News November 1, 2025
1.12 லட்சம் ஊழியர்களை பணி நீக்கம் செய்த நிறுவனங்கள்

AI-ன் வரவால், நடப்பாண்டில் இதுவரை சர்வதேச அளவில் 1.12 லட்சம் ஊழியர்களை 218 நிறுவனங்கள் பணி நீக்கம் செய்துள்ளன. இதில் அதிகபட்சமாக UPS 48,000, INTEL 24,000, TCS 20,000, அமேசான் 14,000 ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியுள்ளன. ஐடி, கன்சல்டிங், உற்பத்தி என பல துறை ஊழியர்கள் இதில் பாதிக்கப்பட்டுள்ளனர். வருவாய் நிலைத்த தன்மை இல்லாததும் பணி நீக்கத்திற்கு ஒரு காரணமாக இருக்கிறது.
Similar News
News November 3, 2025
Chokers இல்ல… நாங்க சாம்பியன்ஸ்

என்ன தான் திறமை இருந்தாலும் கோப்பையை வெல்லாத அணியை வசைபாடி கொண்டே தான் இருப்பார்கள். மகளிர் ODI WC வரலாற்றில் 1997, 2000-ல் அரையிறுதி வரை முன்னேறியும், 2005 மற்றும் 2017-ல் இறுதிப்போட்டியில் விளையாடி ரன்னர் அப் ஆக வெறும் கையுடன் திரும்பியதால் இந்திய அணி மீது Chokers டேக் இருந்தது. இன்றைய வெற்றியானது Chokers டேக்கை உடைத்ததோடு மட்டுமின்றி பல விமர்சனங்களுக்கும் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.
News November 3, 2025
அன்று கபில் தேவ்.. இன்று ஹர்மன்பிரீத் கவுர்

ஆடவர் கிரிக்கெட்டில் இந்தியா தற்போது கோலோச்சுவதற்கு 1983 உலகக் கோப்பை வெற்றி முக்கியமானதாகவும். கபில் தேவ் அண்ட் கோ வெற்றி, இந்திய கிரிக்கெட்டுக்கு திருப்புமுனையாக அமைந்தது. அவ்வெற்றியால் ஊக்கமடைந்து சச்சின், தோனி, கோலி, ரோஹித் போன்ற பல ஜாம்பவான்கள் உருவெடுத்தனர். அதுபோல, மகளிர் WC-ல் ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான வெற்றியின் உந்துதலால் எதிர்காலத்தில் பல நட்சத்திர வீராங்கனைகள் உருவாவார்கள்.
News November 3, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: தெரிந்துதெளிதல் ▶குறள் எண்: 508 ▶குறள்: தேரான் பிறனைத் தெளிந்தான் வழிமுறை தீரா இடும்பை தரும். ▶பொருள்: நாட்டுச் சிந்தனைகளில் பற்று இல்லாதவனை, அவன் பின்னணி பற்றி ஆராயாது பதவியில் அமர்த்தினால் அச்செயல் நீங்காத துன்பத்தைத் தரும்.


