News November 1, 2025
நகை கடன்… HAPPY NEWS

தங்கம் விலை உயர்ந்து வருவதையொட்டி, கூட்டுறவு வங்கிகளில் வழங்கப்படும் நகைக்கடன் தொகை, கிராமுக்கு 7,000-ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு தற்போது அமலுக்கு வந்துள்ளது. முன்னதாக, 1 கிராம் தங்கத்துக்கு ₹6,000 மட்டுமே கடனாக வழங்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. தங்கத்தை வங்கிகளில் அடகு வைக்கும் முன், பொதுமக்கள் அவசியம் தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்களை அறிய <<17712760>>இங்கே<<>> கிளிக் செய்யவும். SHARE IT.
Similar News
News November 2, 2025
வந்தது புயல் சின்னம் .. மழை பொளந்து கட்டும்

மொன்தா புயலுக்கு பிறகு தமிழகத்தில் படிப்படியாக மழை குறைந்தது. இந்நிலையில், மத்திய கிழக்கு வங்கக் கடலில் இன்று புதிதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடகிழக்கு திசையில் நகரும் எனக் கணிக்கப்பட்டுள்ளது. இதனால், தமிழகத்தில் மீண்டும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD தெரிவித்துள்ளது. நவ.8 வரை தமிழகம், புதுவையில் மிதமான மழை பெய்யும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
News November 2, 2025
நெல்லி மருத்துவ குணங்கள்

உடலுக்கு பல்வேறு நன்மைகள் தரும் நெல்லிக்காய், மலிவு விலையில் எளிதில் கிடைக்கும். இது தோல், முடி, கண் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு பெரும் பயனளிக்கிறது. தினசரி நெல்லிக்காய் சாப்பிடுவது, உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. நெல்லிக்காய் உடலுக்கு என்னென்ன நன்மைகள் தருகிறது என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.
News November 2, 2025
வீரர்கள் வந்தனர், பயந்தவர்கள் வரவில்லை: RS பாரதி

SIR தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் வீரர்கள் வந்தார்கள் என்றும், பயந்தவர்கள் வரவில்லை என்றும் RS பாரதி விமர்சித்துள்ளார். கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் பங்கேற்காதவர்கள் குறித்த கேள்விக்கு, வராதவர்களை பற்றி கவலை இல்லை என்றும், அவர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக பயந்து கொண்டு வரவில்லை எனவும் குறிப்பிட்டார். ஜனநாயக உணர்வோடு வந்தவர்களை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.


