News November 1, 2025

50 விநாடி விளம்பரத்திற்கு ₹5 கோடி சம்பளம்

image

50 விநாடிகள் ஓடும் டாடா ஸ்கை விளம்பரத்தில் நடிக்க, நயன்தாரா ₹5 கோடி சம்பளம் பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சினிமாவில் நடிக்க ₹10 – ₹15 கோடி சம்பளம் பெறும் நிலையில், விளம்பரத்தில் நடிக்க அவர் வாங்கும் சம்பளம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது. தென்னிந்தியாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையான நயன்தாராவின் கைவசம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட பல மொழிப்படங்கள் உள்ளன.

Similar News

News November 2, 2025

நெல்லி மருத்துவ குணங்கள்

image

உடலுக்கு பல்வேறு நன்மைகள் தரும் நெல்லிக்காய், மலிவு விலையில் எளிதில் கிடைக்கும். இது தோல், முடி, கண் உள்ளிட்ட உடல் உறுப்புகளின் ஆரோக்கியத்திற்கு பெரும் பயனளிக்கிறது. தினசரி நெல்லிக்காய் சாப்பிடுவது, உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவுகிறது. நெல்லிக்காய் உடலுக்கு என்னென்ன நன்மைகள் தருகிறது என்று, மேலே போட்டோக்களாக கொடுத்திருக்கிறோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.

News November 2, 2025

வீரர்கள் வந்தனர், பயந்தவர்கள் வரவில்லை: RS பாரதி

image

SIR தொடர்பான அனைத்து கட்சி கூட்டத்தில் வீரர்கள் வந்தார்கள் என்றும், பயந்தவர்கள் வரவில்லை என்றும் RS பாரதி விமர்சித்துள்ளார். கூட்டத்திற்கு அழைப்பு விடுத்தும் பங்கேற்காதவர்கள் குறித்த கேள்விக்கு, வராதவர்களை பற்றி கவலை இல்லை என்றும், அவர்கள் தனிப்பட்ட காரணங்களுக்காக பயந்து கொண்டு வரவில்லை எனவும் குறிப்பிட்டார். ஜனநாயக உணர்வோடு வந்தவர்களை வரவேற்பதாகவும் அவர் தெரிவித்தார்.

News November 2, 2025

உடல் உறுப்புகளை திருடி விட்டனர்: ஹமாஸ்

image

உயிரிழந்த பாலஸ்தீனியர்களின் உடல்களில் இருந்து இஸ்ரேலிய ராணுவம் உறுப்புகளை திருடிவிட்டதாக ஹமாஸ் மற்றும் காஸா சுகாதார அமைச்சக அதிகாரிகள் குற்றஞ்சாட்டியுள்ளனர். ஹமாஸ் – இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக சமீபத்தில் பலியான கைதிகளின் உடல்கள் பரிமாற்றம் செய்யப்பட்டன. இஸ்ரேல் வழங்கிய உடல்களை பரிசோதித்த காசா அதிகாரிகள், சடலங்களின் உள்ளே பஞ்சு அடைக்கப்பட்டிருந்ததாக தெரிவித்துள்ளனர்.

error: Content is protected !!