News November 1, 2025
சற்றுமுன்: புதன்கிழமை அனைத்து பள்ளிகளுக்கும்…

₹50,000 வரை பரிசுகளை வெல்லும், மாநில அளவிலான வினாடி வினா போட்டிக்கு விண்ணப்பிக்க நவ.5(புதன்கிழமை) கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. ‘சூழல் அறிவோம்’ என்ற தலைப்பில் 6 – 9 வகுப்பு மாணவர்களுக்கு காலநிலை மாற்றம் குறித்த வினாடி வினா போட்டி நடத்த அரசு ஏற்பாடு செய்துள்ளது. https://www.tackon.org/soozhal இணையதளத்தில் ஒவ்வொரு பள்ளிகளில் இருந்தும் 2 மாணவ குழுக்கள் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. SHARE
Similar News
News November 2, 2025
பக்குவமான உணவுக்கு உதவும் சமையல் டிப்ஸ்கள்!

அனைவருக்கும் ஓரளவு சமைக்க முடியும். ஆனால், சிலரால் மட்டுமே சுவையாக சமைக்க தெரியும். ஆனால், இரண்டுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. உங்களின் உணவும் டெஸ்ட்டியாக இருக்க, சில டிப்ஸ்களை கொடுத்துள்ளோம். மேலே உள்ள போட்டோவை வலது பக்கம் Swipe செய்து டிப்ஸை தெரிஞ்சிக்கோங்க. இந்த பயனுள்ள தகவலை அனைவருக்கும் பகிருங்கள். அதே போல, உங்களுக்கு தெரிஞ்ச சில சமையல் டிப்ஸையும் கமெண்ட் பண்ணுங்க.
News November 2, 2025
6, 6, 6, 4, 4, 4, 4, 4, 4, 4… மரண அடி

இந்தியாவுக்கு எதிரான 3-வது T20-ல் ஆஸி.,யின் டிம் டேவிட் அதிரடி காட்டி வருகிறார். இதுவரை 3 சிக்ஸர், 7 பவுண்டரி பறக்கவிட்டுள்ளார். தற்போது 10 ஓவர்களில் ஆஸி., அணி 84/4 ரன்களை எடுத்து விளையாடி வருகிறது. டிராவிஸ் ஹெட், இங்கிலிஸ், ஓவன் ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அரைசதம் கடந்துள்ள டிம் டேவிட் இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக அமைந்துள்ளார். மேலும், T20I-களில் அவர் 1,000 ரன்களை கடந்துள்ளார்.
News November 2, 2025
Co-Star மீது புகாரளித்த Stranger Things பிரபலம்

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடரில் El கேரக்டரில் நடித்த மில்லி பாபி ப்ரவுன், டேவிட் ஹார்பர் மீது bullying, harassment குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தகவல் கசிந்துள்ளது. இறுதி சீசன் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன், அவர் இதுகுறித்து NETFLIX-யிடம் புகார் அளித்திருக்கிறார். இதன் மீதான விசாரணை மாதக்கணக்கில் நடந்ததாக கூறப்படுகிறது. இது பாலியல் ரீதியான குற்றச்சாட்டு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.


