News November 1, 2025
கோவை: இலவச AI தொழில்நுட்ப பயிற்சி!

கோவையில், தமிழக அரசின் வெற்றி நிச்சயம் திட்டத்தின் கீழ், இலவச Artificial Intelligence Programmer பயிற்சி வழங்கப்படுகிறது. 75 நாட்கள் நடைபெறும் இந்த பயிற்சியில் AI தொழில்நுட்பம் தொடர்பான அனைத்தும் கற்றுத்தரப்படுகிறது. இதற்கு டிகிரி முடித்தால் போதுமானது. பயிற்சி முடித்தால் வேலை வாய்ப்பு உறுதிசெயப்படும் என கூறப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க <
Similar News
News November 2, 2025
சிறப்பு ரயில் அறிவிப்பு

பயணிகள் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, கோவை–மடார் (ராஜஸ்தான்) இடையே வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்படும் என ரயில்வே அறிவித்துள்ளது. கோவை–மடார் (06181) ரயில் (நவ.13 முதல் டிச.4) வரை வியாழன் அதிகாலை புறப்படும்; மடார்–கோவை (06182) ரயில் (நவ.16 முதல் டிச.7) வரை ஞாயிறு இரவு புறப்படும். மேலும் இந்த ரயில் திருப்பூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட நிலையங்களில் நின்று செல்லும்.
News November 2, 2025
கோவை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்.
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க.
News November 2, 2025
கோவையில் கிரிக்கெட் மைதானம் இதுதான்

கோவை ஒண்டிப்புதூர் திறந்தவெளி சிறை சாலையில் 20.72 ஏக்கரில் அமைய உள்ள மைதானத்தில் வலைப் பயிற்சி இடம், உணவகம், உயர் தர இருக்கை வசதி, பயிற்சி அரங்கம், வீரர்களுக்கான ஓய்வறை உள்ளிட்ட இடம்பெற உள்ளன. கோவையில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்க தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகம் டெண்டர் கோரியுள்ள நிலையில் அமைய உள்ள மைதானம் குறித்த புகைப்படங்களை வெளியிட்டுள்ளது வடிவமைப்பு நிறுவனம்.


