News November 1, 2025
நெல்லையப்பர் கோவில் வெள்ளி தேர் வெள்ளோட்டம் ஒத்திவைப்பு

திருநெல்வேலி சுவாமி நெல்லையப்பர் கோவிலில் புதியதாக வெள்ளி தேர் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேரின் வெள்ளோட்டம் வருகிற 3ஆம் தேதி மாலை நடைபெறும் என ஏற்கனவே கோயில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் நிர்வாக காரணங்களுக்காக தேர் வெள்ளோட்டம் ஒத்தி வைக்கப்படுகிறது. புதிய தேதி பின்னர் அறிவிக்கப்படும் என செயல் அலுவலர் தெரிவித்துள்ளார்.
Similar News
News November 2, 2025
நெல்லையில் வீடு இடிந்து விழுந்து ஒருவர் பலி

திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் காவல் நிலையத்திற்குட்பட்ட ஆத்துகுறிச்சி கிராமத்தில் இரவு நேரத்தில் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த மரிய புஷ்பம் என்ற மூதாட்டி மீது வீடு இடிந்து விழுந்ததில் இடிபாடுகளில் சிக்கி மூதாட்டி உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில் இருகுறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 2, 2025
களக்காடு தலையணையில் குளிக்க அனுமதி

நெல்லை மாவட்டம் களக்காடு புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மேற்கு தொடர்ச்சி மலையில் இயற்கை எழில் சூழ்ந்த நிலையில் தலையணை உள்ளது.
கடந்த வாரம் வரை நெல்லை மாவட்டத்தில் கனமழை பெய்ததால் தலையணையில் குளிப்பதற்கு சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நேற்று ( நவ.1) முதல் தடை விளக்கப்பட்டு பயணிகள் தலையணையில் குளிக்க அனுமதிக்கப்பட்டனர்.
News November 2, 2025
நெல்லையில் போலீசார் அதிரடி இடமாற்றம்

திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் போலீஸ் டிஎஸ்பி சதீஷ்குமார் தர்மபுரிக்கு இடமாறுதல் செய்யப்பட்டுள்ளார். இதுபோல் நெல்லை மாநகர நுண்ணறிவு போலீஸ் உதவி கமிஷனர் கதிர்லால் சிவில் சப்ளை சிஐடி பிரிவு மயிலாடுதுறைக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது.


