News November 1, 2025
நவ.1 ஏன் ‘தமிழ்நாடு நாள்’ அல்ல என்று தெரியுமா?

நவ.1 மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால் தமிழ்நாடு மட்டும் ஜூலை 18-ஐ தான் தமிழ்நாடு நாளாக கொண்டாடும். ஏன் தெரியுமா? என்ன தான் மாநிலங்கள் பிரிக்கப்பட்டாலும், 1967, ஜூலை 18-ம் தேதி தமிழ்நாடு என பெயர் சூட்டும் வரை அது சென்னை மாகாணமாகவே இருந்தது. எனவே தான், அண்ணா தமிழ்நாடு என பெயர்சூட்டிய ஜூலை 18, தமிழ்நாடு நாளாக அறிவிக்கப்பட்டு, அதுவே தற்போது கொண்டாடப்பட்டு வருகிறது.
Similar News
News November 3, 2025
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (நவ.3) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email -way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க
News November 3, 2025
மழைக் காலத்தில் இதை கவனியுங்க…

பைக், கார் வைத்திருப்பவர்கள் மழைக்காலத்தில் வாகன பராமரிப்பில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். உங்கள் வண்டிக்கு தேவையான காப்பீடு அம்சங்களை உள்ளடக்கிய இன்ஷூரன்ஸ் பாலிசி (காலாவதி ஆகாமல்) இருப்பதை உறுதி செய்துகொள்ளுங்கள். மழையில் வாகனம் அழுக்காக போகிறது என்பதால், மழை முடிந்தபின் சர்வீஸ் செய்துகொள்ளலாம் என அசட்டையாக இருந்தால், பழுது ஏற்பட்டு தேவையில்லாத பிரச்சனைகள் ஏற்படலாம். கவனமாக இருங்கள். SHARE IT
News November 3, 2025
நள்ளிரவு 1 மணி வரை 10 மாவட்டங்களில் மழை பொழியும்

நள்ளிரவு 1 மணி வரை 10 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவள்ளூர், வேலூர், T.V.மலை, காஞ்சீபுரம், திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்யும் என்றும், சென்னை, கிருஷ்ணகிரி, சேலம், தருமபுரி, நீலகிரி, கோவை மாவட்டங்களில் லேசான மழை பெய்யும் என்றும் IMD தெரிவித்துள்ளது. உங்கள் ஊரில் மழை பெய்கிறதா?


