News November 1, 2025
மீண்டும் புயல் சின்னம்.. மழை வெளுக்கப் போகுது

வங்கக் கடலில் நாளை(நவ.2) பிற்பகலுக்குள் புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகக் கூடும் என IMD கணித்துள்ளது. இது புயலாக மாறுமா என பின்னர் அறிவிக்கப்படும். காற்றழுத்தம் காரணமாக, தமிழகம், புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நவ.7 வரை மிதமான மழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மொன்தா புயலால் தமிழகத்தில் மழை கொட்டித் தீர்த்தது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 3, 2025
அவலத்தை திசைதிருப்ப அனைத்துக் கட்சி கூட்டம்: தவெக

ஊழல் மாடல் ஆட்சியின் அவலத்தை திசைதிருப்பவே அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டதாக தவெகவின் அருண்ராஜ் விமர்சித்துள்ளார். நேற்று வேலைவாய்ப்பில் ஊழல், இன்று மணல் கொள்ளையில் மவுனம், திமுகவின் கபட நாடகத்தை தமிழக மக்கள் விழிப்போடு கவனித்துக் கொண்டு இருப்பதாகவும் அவர் சாடியுள்ளார். மேலும், 2026-ல் மக்கள் நிச்சயம் திமுகவிற்கு தகுந்த பாடத்தை புகுட்டி வீட்டுக்கு அனுப்புவது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.
News November 3, 2025
ராசி பலன்கள் (03.11.2025)

ஒவ்வொரு நாளும் உங்களுக்கு உற்சாகம் தரும் நாளாக அமையட்டும். உங்களுக்கான தினசரி ராசி பலன்களை போட்டோ வடிவில் மேலே கொடுத்துள்ளோம். மேலே இருக்கும் போட்டோஸை SWIPE செய்து உங்களுக்கான பலனை அறிந்துகொள்ளுங்கள். உங்கள் நண்பர்களுக்கும் இதை SHARE பண்ணுங்க.
News November 3, 2025
தம்பதியர் இடையே சலிப்பு ஏற்பட காரணம் இதுதான்

திருமண உறவோ, காதல் உறவோ, பெரும்பாலான உறவுகள் சில ஆண்டுகளில், ஏன் சில மாதங்களிலேயே கசந்து விடுகின்றன. அதற்கு பின்வருபவை முக்கிய காரணங்கள்: *பரஸ்பரம் மரியாதை தராதது *சீரற்ற செயல்பாடு *ஏமாற்றுதல் *இணையை ஸ்பெஷலாக உணர செய்யாதது *வாக்குறுதியை மீறுதல். இந்த பிரச்னைகளை சரிசெய்தால் உங்கள் வாழ்க்கை அழகாக மாறும் என்கின்றனர் மனநல ஆலோசகர்கள். SHARE IT


