News November 1, 2025
எல்லை போராட்ட தியாகிகள் நாள்: CM

ஜூலை 18 தமிழ்நாடு நாளாக கொண்டாடப்படும் நிலையில், மொழி வாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்ட இன்றைய நாளை, எல்லை போராட்ட தியாகிகள் நாள் என்று கூறி, CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். தமிழகத்தின் பல பகுதிகளை போராடி பெற்றுத்தந்த மார்ஷல் நேசமணி, ம.பொ.சி., முதலிய எண்ணற்ற போராளிகளுக்கு இந்த நாளில் வீரவணக்கத்தை செலுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். நம் தலைவர்கள் வழியில் உரிமைகளை காப்போம் என்றும் அவர் கூறியுள்ளார்.
Similar News
News November 2, 2025
இன்னும் ஒரு போட்டிதான்..

உலகக்கோப்பையில் ஆதிக்கம் செலுத்தி வந்த நடப்பு சாம்பியன் ஆஸி., மகளிர் அணியை வீட்டுக்கு அனுப்பி, இந்திய அணி இறுதி போட்டிக்குள் நுழைந்துவிட்டது. இன்று தென்னாப்பிரிக்க அணியை மட்டும் வீழ்த்தி விட்டால் போதும் கோப்பை கனவை இந்தியா நிறைவு செய்து, ரசிகர்களையும் Weekend-ல் குதூகலத்தில் ஆழ்த்தி விடும். கோப்பை கனவு நிறைவேறும் என நினைக்கிறீங்களா?
News November 2, 2025
Kebab-க்கு உலகளவில் கிடைத்த அங்கீகாரம்

லக்னோவின் புகழ்பெற்ற அவதி உணவுக் கலாச்சாரத்துக்கு ’சிட்டி ஆஃப் காஸ்ட்ரானமி’ பட்டத்தை UNESCO வழங்கியுள்ளது. இதன்மூலம், கலூட்டி கபாப், பிரியாணி, டோக்கரி சாட் ஆகிய உணவுகளுக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது. தனித்துவமான உணவுக் கலாச்சாரம், சமையல் கலையை அங்கீகரிக்கவே ’சிட்டி ஆஃப் காஸ்ட்ரானமி’ பட்டம் வழங்கப்படுகிறது. இது லக்னோவின் உணவுப் பாரம்பரியத்தை உலகளவில் பிரபலப்படுத்தும்.
News November 2, 2025
BREAKING: விஜய் அறிவித்தார்

SIR-க்கு எதிராக அனைத்து கட்சியும் ஒன்றிணைய வேண்டும் எனும் நிலைப்பாட்டில் தவெக உறுதியாக இருப்பதாக விஜய் அறிவித்துள்ளார். அதே சமயம், SIR எதிர்ப்பை வாக்கு அரசியலுக்காக திமுக பயன்படுத்துவதாகவும், அதனால்தான் கூட்டத்தில் பங்கேற்கவில்லை எனவும் விளக்கமளித்துள்ளார். மேலும், SIR-க்கு எதிராக கேரள சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதாக கூறிய அவர், திமுக இதை செய்யாதது ஏன் எனவும் கேட்டுள்ளார்.


