News November 1, 2025
சிவகங்கை: கோவிலில் வேலை., ரூ.58,600 வரை சம்பளம்!

சிவகங்கை மக்களே, இந்து சமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 31 இளநிலை உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழில் படிக்க மற்றும் எழுத தெரிந்த மற்றும் 10th முடித்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் நவ.25க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.10,000 – 58,600 வரை வழங்கப்படும். மேலும் விபரங்களுக்கு இங்கு <
Similar News
News November 2, 2025
காரைக்குடி: கார் மோதி ஒருவர் உயிரிழப்பு

காரைக்குடி அருகேயுள்ள அமராவதிப் புதூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த குணசேகரன் (54) நேற்று திருச்சி – ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தார். அப்போது எதிரே வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து குணசேகரன் மீது மோதியதில் அவர் தூக்கி வீசப்பட்டார். அவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்ற நிலையில் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர். சோமநாதபுரம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 2, 2025
சிவகங்கையில் இளைஞர் வெட்டி கொலை

சிவகங்கை அருகே மதுரை முக்கு பகுதியைச் சேர்ந்த பாக்கியராஜ் மகன் ராஜேஷ் (21) என்பவர், நேற்று இரவு பேருந்து நிலையம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, இரண்டு இருசக்கர வாகனங்களில் வந்த மூன்று மர்ம நபர்கள் ராஜேஷை விரட்டியுள்ளனர். அவர் அங்கிருந்து தப்பி ஓட முயன்றபோது, பேருந்து நிலையம் அருகே உள்ள உணவகம் பகுதியில் அவரை சரமாரியாக வெட்டியுள்ளனர். இதனால் ராஜேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
News November 2, 2025
சிவகங்கை: ரேஷன் கார்டு வைத்திருப்போர் கவனத்திற்கு

சிவகங்கை மக்களே ரேஷன் கடை திறந்திருக்கிறதா என்பதை இனி வீட்டிலிருந்தபடியே தெரிந்துகொள்ளலாம். உங்கள் ரேஷன் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணில் இருந்து PDS 102 என டைப் செய்து 9773904050 என்ற எண்ணுக்கு SMS அனுப்பினால், ரேஷன் கடை திறந்திருப்பது குறித்த தகவல் உங்களுக்கு மெசேஜாக வரும். புகார்களைப் பதிவு செய்ய PDS 107 என டைப் செய்து அதே எண்ணுக்கு அனுப்பலாம். தெரிந்தவர்களுக்கு மறக்காம SHARE பண்ணுங்க.


