News November 1, 2025

புதுவை: மது போதையில் ரகளை செய்த இளைஞர் கைது

image

லாஸ்பேட்டை கிழக்கு கடற்கரை சாலையில் பொது மக்களிடம் வாலிபர் ஒருவர் மது போதையில் ரகளை செய்வதாக, போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் லாஸ்பேட்டை போலீசார் அங்கு விரைந்து சென்று
ரகளையில் ஈடுபட்ட வாலிபரை பிடித்து விசாரித்தனர். அதில், அவர் லாஸ்பேட்டை சதீஷ் குமார்( 27), என்பது தெரிய வந்தது. பின் அவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.

Similar News

News November 2, 2025

புதுச்சேரி: குழந்தை பிறந்த உடனே சான்றிதழ்!

image

பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ் பெற நகராட்சி அலுவலகங்களில் காத்திருந்து பெறும் சூழல் இருந்து வந்தது. இதனை மாற்ற மத்திய அரசு புதிய செயலியை அறிமுகப்படுத்தி உள்ளது. இதில் புதுச்சேரியும் இணைந்துள்ளது. இதன் மூலம் குழந்தை பிறந்த 24 மணி நேரத்திலேயே பிறப்புச் சான்றிதழ் பெற முடியும். அந்த வகையில் நேற்று புதுச்சேரியில் பிறந்த உடனே பிறப்பு சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி தனியார் மருத்துவமனை ஒன்றில் நடந்தது.

News November 2, 2025

புதுச்சேரியில் அங்கன்வாடி ஊழியர்கள் போராட்டம்

image

உதவியாளர்களுக்கு ஓர்க்கர் பதவி உயர்வு; ஓர்க்கர்களுக்கு மேற்பார்வையாளர் பதவி உயர்வு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்; அங்கன்வாடி ஊழியர்களுக்கு ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைகளை அமுல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று அங்கன்வாடி ஊழியர்கள் புதுச்சேரி சாரத்தில் உள்ள மகளிர் மற்றும் மேம்பாட்டு துறை முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

News November 2, 2025

புதுவை: பாரீசில் இருந்து பைக்கில் வந்த இளம்ஜோடி

image

பிரான்ஸ் நாட்டின் பாரீஸ் நகரைச் சேர்ந்தவர் கெவின். இவரது தாய்-தந்தையர் புதுச்சேரி வெங்கட்டா நகரைச் சேர்ந்தவர்கள். கெவின் அவரது மனைவியான ஈம்மாவிற்கு தனது சொந்த ஊரான புதுச்சேரியை காண்பிக்க விரும்பியுள்ளார். இந்நிலையில் இருவரும் உயர்ரக இருசக்கர வாகனத்தில் 5 மாதங்களுக்கு முன் பிரான்ஸ் நாட்டில் இருந்து புறப்பட்டுள்ளனர். இதனை அடுத்து, நேற்று புதுச்சேரி வந்த அவர்களை, உறவினர்கள் வரவேற்றனர்.

error: Content is protected !!