News November 1, 2025
தஞ்சாவூர்: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

தஞ்சாவூர் மக்களே.., வீடுகள், வணிக வளாகங்கள் மற்றும் அலுவலகங்களில் மின்சார சேவை பாதிக்கப்படும் போது, பொதுமக்கள் லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய காலம் முடிந்தது. தற்போது,பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, தங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் வருவார். மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!
Similar News
News November 2, 2025
தஞ்சை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் இங்கே <
News November 2, 2025
தஞ்சை: இன்றும் இயங்கும் கொள்முதல் நிலையங்கள்

KMS 2025-2026 குறுவை பருவத்தில் அதிக நெல் கொள்முதல் நடைபெற்று வரும் நிலையில், வடகிழக்கு மழை காரணமாக விவசாயிகள் காத்திருக்கும் நிலையை தவிர்க்க, இன்று (நவ.02) தஞ்சாவூர் மாவட்டத்தின் 291 நெல் கொள்முதல் நிலையங்கள், 9 தொகுப்பு கிடங்குகள், 14 சேமிப்பு கிடங்குகள், 3 திறந்த வெளி மையங்கள் மற்றும் 3 ரயில் தலைப்புகள் இயங்கும் என மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் தெரிவித்துள்ளார்.
News November 2, 2025
தஞ்சை: 2000 டன் நெல் திருப்பூர் அனுப்பி வைப்பு

தஞ்சை மாவட்டத்தில் உள்ள பல்வேறு கொள்முதல் நிலையங்கள் மற்றும் சேமிப்பு கிடங்குகளில் இருந்து 2 ஆயிரம் டன் நெல் மூட்டைகள் லாரிகளில் ஏற்றப்பட்டு, நேற்று (நவ.01) தஞ்சை ரயில் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டன. பின்னர் சரக்கு ரயிலின் 42 வேகன்களில் நெல் மூட்டைகள் ஏற்றப்பட்டு, பொது விநியோக திட்ட அரவைக்காக திருப்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.


