News November 1, 2025

கடலூர்: தேர்வு இல்லாமல் வங்கி வேலை

image

கடலூர் மக்களே, நபார்டு வங்கியில் (NABARD) பல்வேறு காலிப் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. 12-வது தேர்ச்சி பெற்ற 18-33 வயதுகுட்பட்டவர்கள் இங்கு கிளிக் செய்து நவ.15-க்குள் விண்ணப்பிக்கலாம். சம்பளம் ரூ.20,000 – ரூ.30,000 வரை வழங்கப்படும். இதற்கு தேர்வு கிடையாது. நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். விருப்பமுள்ளவர்கள் nabfins.org/Careers எனும் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்லாம்.

Similar News

News November 2, 2025

கடலூர் : கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <>இங்கே <<>>க்ளிக் செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE NOW

News November 2, 2025

கடலூர்: போக்சோ வழக்கில் வாலிபர் கைது

image

புவனகிரி அருகே சாக்காங்குடி சேர்ந்தவர் அருண்ராஜ(34). இவர் வீட்டில் தனியாக இருந்த 14 வயது சிறுமிக்கு, வீட்டில் யாரும் இல்லை என்பதை தெரிந்து கொண்டு, குடிபோதையில் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தாக கூறப்படுகிறது. இது குறித்த புகாரின் பேரில், சேத்தியாத்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் அருண்ராஜை போக்சோ வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

News November 2, 2025

கடலூர்: வாகன பொது ஏலம் அறிவிப்பு

image

நிலஅளவைப் பதிவேடுகள் துறை உதவி இயக்குநரின் அலுவலகப் பணிகளுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்ட கழிவு செய்யப்பட்ட வாகனம் நவ.14ம் தேதி அன்று ஆட்சியர் அலுவலகத்தில் ஏலம் விடப்படுகிறது என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார். ஏலத்தில் கலந்து கொள்கிறவர்கள் 10% பிணையத்தொகை வரைவோலையாக செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!