News November 1, 2025

விருதுநகர்: கொலை வழக்கில் இருவர் கைது

image

சென்னிலைகுடி கிராமத்தில் கடந்த அக்.30ல் கூலித் தொழிலாளி அசோக்ராஜ் தலையில் கல்லை போட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் போலீசாரின் விசாரணையில் அசோக்ராஜ் உறவினர்கள் (அண்ணன் முறை) சங்கர் (57) மற்றும் சுந்தரமூர்த்தி (43) ஆகிய இருவரும் சேர்ந்து இடப்பிரச்சினை காரணமாக மதுபோதையில் இருந்த அசோக்ராஜை தலையில் கல்லை போட்டு கொலை செய்தது தெரியவந்தது. திருச்சுழி போலீசார் அவர்கள் இருவரையும் கைது செய்தனர்.

Similar News

News November 2, 2025

சிவகாசி கோட்டத்தில் மின்தடை அறிவிப்பு

image

சிவகாசி கோட்டத்தில் உள்ள அனுப்பன்குளம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக வருகின்ற செவ்வாய் கிழமை (04:11:2025 ) அனுப்பன்குளம், பேராபட்டி, சுந்தராஜபுரம், மீனம்பட்டி, நாராணபுரம், செல்லியநாயக்கன்பட்டி, சின்னகாமன்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் காலை 9:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணிவரை மின்தடை ஏற்படும் என மின்வாரிய நிர்வாகம் செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளது.

News November 2, 2025

விருதுநகரில் நாளை முதல் வீடு தேடி வரும்

image

விருதுநகரில் வயதான குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் வீட்டிற்கு சென்று குடிமைபொருள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நாளை, நாளை மறுநாள்(நவ.3,4) இந்த மாதத்திற்கான ரேஷன் பொருட்கள் வீடு தேடி சென்று வழங்கப்பட உள்ளது. தகுதியுடைய குடும்ப அட்டைதாரர்கள் இதனை பயன்படுத்தி கொள்ளுமாறு விருதுநகர் மண்டல கூட்டுறவு சங்க இணைபதிவாளர் செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

News November 2, 2025

ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயருகிறது – எம்.எல்.ஏ

image

சிவகாசி அருகே செங்கமலநாச்சியார்புரம் ஊராட்சியில் கிராம சபை கூட்டம் சிவகாசி சட்டமன்ற உறுப்பினர் அசோகன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகளை சட்டமன்ற உறுப்பினரிடம் முன்வைத்தனர். அப்போது பேசிய சட்டமன்ற உறுப்பினர் அசோகன், தமிழக அரசின் திட்டங்கள் மூலம் ஏழை மக்களின் வாழ்க்கை தரம் உயருகிறது என தெரிவித்தார்.

error: Content is protected !!