News November 1, 2025
கோபி அருகே பெண் சடலம் மீட்பு

கோபி அருகே வாழைத்தோட்டத்தில் உடல் வெளியே தெரிந்த நிலையில் பெண் உடல் புதைக்கப்பட்டிருந்தது. தகவல் கிடைத்த காவல்துறையினர் உடலை தோண்டி எடுத்து பார்வையிட்டனர். 35 வயது மதிக்கத்தக்க பெண் கழுத்து, தலை பகுதியில் கத்தியால் குத்தப்பட்டு கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. கொலை செய்யப்பட்ட பெண் யார்? கொலைக்கான காரணம் தொடர்பாக காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
Similar News
News November 2, 2025
ஈரோடு: ஆதார் அட்டையில் திருத்தமா?

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நேற்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே இங்கே கிளிக் செய்து மாற்றம் செய்து கொள்ளலாம். மேலும் ஆதார்-பான் இணைப்பு, KYC செயல்முறையும் எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. (ஷேர் பண்ணுங்க)
News November 2, 2025
ஈரோடு: தொழிலாளி தூக்கு மாட்டி தற்கொலை

ஈரோடு ராசாம்பாளையம் தென்றல்நகரை சேர்ந்தவர் சதீஷ்குமார் (40). கூலித்தொழிலாளியான இவருக்கு திருமணம் ஆகவில்லை. மேலும் மது பழக்கத்துக்கு அடிமையாகி இருந்த இவர் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி இருந்தார். திருமணம் ஆகாத விரக்தியிலும், கடன் சுமையாலும் அவதிப்பட்டு வந்த சதீஷ்குமார் வீட்டில் இருந்தபோது தூக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஈரோடு வடக்கு காவல்துறையினர் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 2, 2025
சத்தியமங்கலம் அருகே சோகம்

சத்தியமங்கலம் பேருந்து நிலையம் அருகில் உள்ள பூ மார்க்கெட்டில் 45-வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து உயிரிழந்தவர் யார்? என விசாரணை நடத்தி வருகின்றனர்.


