News November 1, 2025
வேலூர்: ஆதார் அட்டையில் திருத்தமா? இனி ஈஸி

ஆதார் அட்டையில் பெயர், முகவரி, பிறந்த தேதி மற்றும் மொபைல் எண் போன்றவற்றை மாற்ற இனி எந்த ஒரு என்ரோல்மெண்ட் மையத்திற்கு செல்ல வேண்டிய அவசியம் இல்லை. இன்று (நவ.1) முதல் எந்த அலைச்சலும் இல்லாமல் வீட்டில் இருந்தபடியே <
Similar News
News November 2, 2025
வேலூர்: லாரி மோதி விபத்து

பள்ளிகொண்டா அருகே வடக்காத்திபட்டி தேசிய நெடுஞ்சாலையில் நேற்று (நவ.1) கோயம்பேடுக்கு வெங்காய மூட்டைகளை ஏற்றி வந்த ஒரு லாரி திடீரென கட்டுப்பாட்டை இழந்து முன்னால் சென்று கொண்டிருந்த கூரியர் சர்வீஸ் வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 2 டிரைவர்கள் படுகாமடைந்தனர். விபத்து குறித்து பள்ளிகொண்டா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
News November 2, 2025
வேலூர் நகை கடையில் திருடிய வாலிபர் கைது

வேலூர் அண்ணா சாலையில் உள்ள தனியார் நகை கடையின் மேலாளர் முகமது சச்சின். இவர் கடந்த 30-ம் தேதி கடையின் நகை விற்பனை மற்றும் இருப்புகளை சரி பார்த்தபோது 11.5 கிராம் நகை குறைவாக இருந்தது. இதையடுத்து சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது கடையில் பணிபுரியும் திருவண்ணாமலையை சேர்ந்த ஜீவானந்தம் (23) நகை திருடியது தெரியவந்தது. இதுகுறித்த புகாரின் பேரில் தெற்கு போலீசார் ஜீவானந்தத்தை நேற்று கைது செய்தனர்.
News November 2, 2025
வேலூரில் இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

வேலூர் மாவட்டத்தில் நேற்று (நவ.01) இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.


