News November 1, 2025

ராம்நாடு: வீடு வீடாக வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு

image

ராமநாதபுரம் ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் வாக்களர் பட்டியல் தீவிர திருத்தம் தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில், மாவட்டத்தில் உள்ள 4 சட்டசபை தொகுதிகளில் உள்ள 12 லட்சத்திற்கும் மேலான வாக்காளர்களின் வீடுகளுக்கு 1,374 வாக்குசாவடி நிலை அலுவலர்கள் நவ. 4 முதல் டிச. 4 வரை வீடு வீடாக 3 முறை சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்க்க உள்ளனர் என முடிவுசெய்யப்பட்டுள்ளது.

Similar News

News November 2, 2025

ராம்நாடு: இந்த எண்களை SAVE பன்னிக்கோங்க!

image

ராமநாதபுரம் மாவட்ட மக்களே, உங்க ரேஷன் கடைகளில் பொருட்கள் கிடைப்பதில் குறைபாடு, ஊழியர்கள் செயல்பாடு, கடை திறப்பு தாமதம் போன்ற புகாருக்கு உடனே கால் பண்ணுங்க..
இராமநாதபுரம் – 9445000363
இராமேஸ்வரம் – 9445000364
திருவாடானை – 9445000365
பரமக்குடி – 9445000366
முதுகுளத்தூர் – 9445000367
கடலாடி – 9445000368
கமுதி – 9445000369
கீழக்கரை – 9499937032
இந்த பயனுள்ள தகவலை எல்லோருக்கும் ஷேர் பண்ணுங்க.

News November 2, 2025

ராம்நாடு: ரூ.1 கோடி மதிப்பிலான கடல் அட்டைகள் பறிமுதல்

image

இன்று இந்திய கடலோர காவல் படை மற்றும் மண்டபம் சுங்கத்துறையினர் இணைந்து தெற்கு மன்னார் வளைகுடா பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது இலங்கைக்கு கடத்துவதற்காக அரசால் தடை செய்யப்பட்ட சுமார் ரூ. 1 கோடி மதிப்பிலான 1360 கிலோ கடல் அட்டைகள் நாட்டுப்படக்கில் இருந்தது. இதனை அடுத்து கடல் அட்டையையும், நாட்டுப்படகையும் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

News November 2, 2025

இடிமின்னல் குறித்து மக்களுக்கு ஆட்சியர் அறிவுரை

image

2025 வட­கிழக்கு­ ப­ருவ மழைக்­கா­லங்களில் பொதுமக்­கள் எதிர்­பாராத இடி மின்­னல் போன்­ற­வற்றின் தாக்குதலில் இருந்­து­ பாதுகாத்துக்­ கொள்­ள­வும் விழிப்பு­டன் இருக்­க­வும் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் அறிவுரைகள் வழங்கியுள்ளார். இடி மின்­ன­லின் போது­ மக்­கள் வெளியே­ செல்­வ­தற்கு முன் வானி­லை எச்­ச­ரிக்­கை­களை­ கவனமு­டன் தெரிந்து­ கொள்­ள­ வேண்டும் எனவும், மேலும் பல அறிவுரைகள் அறிவித்துள்ளார்.

error: Content is protected !!