News November 1, 2025

தென்காசி: காதலுக்கு மறுப்பு., இளைஞர் தற்கொலை

image

தென்காசி பாறையடி தெருவை சேர்ந்த சிவசுப்பிரமணியன் (23). சவுண்ட் ஆப்ரேட்டராக பணிபுரிந்து வந்துள்ளார். இவர் அதே பகுதியை சேர்ந்த பெண்ணை காதலித்து வந்துள்ளார். காதலுக்கு அப்பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் அப்பெண்ணின் உறவினர்கள் நேற்று அவரிடம் தகராறில் ஈடுப்பட்டதாக கூறப்ப்டுகிறது. இதனால் மனமுடைந்த அவர் நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். தென்காசி போலீசார் வழக்குப்பதிவு.

Similar News

News November 2, 2025

தென்காசி: கிராம ஊராட்சியில் வேலை., உடனே APPLY

image

தென்காசி மக்களே, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் காலியாக உள்ள 1483 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 18 to 32 வயதுகுட்பட்ட 10வது தேர்ச்சி பெற்றவர்கள் நவ.9க்குள் <>இங்கு க்ளிக்<<>> செய்து விண்ணப்பிங்க. சம்பளம் ரூ.15,900 முதல் ரூ.50,400 வரை வழங்கப்படும். இதற்கு இன்னும் விண்ணப்பிக்காதோர் உடனே APPLY பன்னுங்க. இந்த நல்ல வாய்ப்பை எல்லோருக்கும் ஷேர் பன்னுங்க.

News November 2, 2025

தென்காசி: கவுன்சிலர் கணவர் கைது

image

பாவூர்சத்திரம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது கீழப்பாவூர் மேலூர் பகுதியை சேர்ந்த விநாயகப்பெருமான் (46) என்பவரிடம் சோதனையிட்டனர். அவர் கூலிப் 40 கிலோ, கணேஷ் புகையிலை 49 கிலோ கொண்ட 10 சாக்கு மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த தெரியவந்தது. அவற்றை பறிமுதல் செய்து அவரை கைது செய்தனர். கைதான விநாயகப் பெருமாள் கீழப்பாவூர் பேரூராட்சி கவுன்சிலர் ராதா என்பவரின் கணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

News November 2, 2025

தென்காசி: இந்த பகுதிகளில் மின் தடை!

image

தென்காசி மக்களே, ஆலங்குளம், கீழப்பாவூர், ஊத்துமலை, புளியங்குடி, வீரசிகாமணி ஆகிய துணை மின் நிலையங்களில் நாளை மறுதினம் (நவ.4) பராமரிப்புப் பணிகள் நடைபெறுகிறது. இதன் காரணமாக அன்று காலை 9 மணி முதல் 2 மணி வரை ஆலங்குளம், நல்லூர், சிவலார்குளம், அய்யாபுரம், ரத்தினபுரி, இந்திரா நகர் சுற்றுவட்டார பகுதிகளில் மின் விநியோக்ம் தடை செய்யப்படுகிறது. மேலும் அறிய இங்கு <>க்ளிக்<<>> செய்யுங்க. இந்த தகவலை ஷேர் செய்யுங்க.

error: Content is protected !!