News November 1, 2025

புதுக்கோட்டை: இயந்திரத்தில் சிக்கி விவசாயி பரிதாப பலி

image

விராலிமலை அடுத்துள்ள மேப்பூதகுடியைச் சேர்ந்தவர் ராசப்பன் (50) விவசாயி. இவர் இன்று காலை (நவ.1) தனது வயலில் பவர் டில்லர் மூலம் உழவு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக பவர் டில்லர் கையில் இருந்து நழுவி அவரது நெஞ்சில் வேகமாக மோதியதில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Similar News

News November 2, 2025

புதுக்கோட்டை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

image

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் இங்கே க்ளிக் செய்து, விண்ணப்பிக்கலாம். SHARE NOW

News November 2, 2025

புதுக்கோட்டையில் சட்டவிரோத மது விற்பனை

image

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி பேருந்து நிலையத்தின் பின்புறம் நேற்று தங்கராஜ்(64), என்பவர் சட்டவிரோத மதுபான பாட்டில்களை விற்பனை செய்தார். இதனை அடுத்து அந்த வழியே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த ஆலங்குடி மதுவிலக்கு காவல்துறையினர் அவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 26 மதுபான பாட்டில்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி, பின் பிணையில் விடுவித்தனர்.

News November 2, 2025

புதுகை: பைக்கில் இருந்து தவறி விழுந்த நபர் படுகாயம்

image

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த குப்பக்குடியிலிருந்து தவள பள்ளத்திற்கு மரிய சூசை(52) என்பவர் நேற்று பைக்கில் சென்றுள்ளார். அப்போது அரசடி பட்டி கிளை சாலையில் பைக்கில் இருந்து தவறி விழுந்து படுகாயம் அடைந்த அவர், ஆபத்தான நிலையில் புதுக்கோட்டை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து அவரது மகன் அளித்த புகாரில் ஆலங்குடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

error: Content is protected !!