News November 1, 2025
BREAKING: செங்கோட்டையன் வெளியிடும் ஆடியோ

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் இன்னும் சற்று நேரத்தில் முக்கிய ஆடியோ ஒன்றை வெளியிட உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். சுமார் 30 நிமிடங்களாக தனது ஆதரவாளர்களுடன் ஈரோடு புறநகர் அதிமுக அலுவலகத்தில் செங்கோட்டையன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். சரியாக 11 மணிக்கு செய்தியாளர்களை சந்தித்து விளக்கம் அளிக்க உள்ளார்.
Similar News
News November 2, 2025
தவெகவில் முக்கிய மாற்றம் செய்து விஜய் அறிவிப்பு

கரூர் துயரத்துக்கு பிறகு தவெகவில், உள்கட்சி கட்டமைப்புகளில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றன. அந்த வகையில், மண்டலம் முதல் பூத் வரை வழக்கறிஞர் பிரிவு நியமனம் செய்யப்பட்டுள்ளது. ஒரு மண்டலத்திற்கு ஒரு ஒருங்கிணைப்பாளர், 10 இணை ஒருங்கிணைப்பாளர் என்றும், ஒரு கிளைக்கு 3 வழக்கறிஞர்கள், 25 பூத்துக்கு 1 வழக்கறிஞர் என நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
News November 2, 2025
திராவிடம் என்பதே திரிபு: சீமான்

வரலாற்றை மறைப்பவர்கள் (அ) திரிப்பவர்களே திராவிடர்கள் என்று சீமான் விமர்சித்துள்ளார். திராவிடம் என்பதே திரிபு என குறிப்பிட்ட அவர், தமிழர்களின் அடையாளங்களை திட்டமிட்டு மறைப்பவர்களே திராவிடர்கள் என்றும் கூறினார். சுயமரியாதை என கூறுவதற்கு திமுக, அதிமுகவில் ஒருவருக்காவது தகுதி இருக்கிறதா என்றும் சீமான் காட்டமாக கேள்வி எழுப்பியுள்ளார். சீமானின் திராவிடம் குறித்த பேச்சு பற்றி என்ன நினைக்கிறீங்க?
News November 2, 2025
10th பாஸ் போதும்.. ₹18,000 உடன் மத்திய அரசு வேலை!

மத்திய அரசின் எல்லை சாலைகள் நிறுவனத்திலுள்ள (BRO) Vehicle Mechanic உள்ளிட்ட 542 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10th, ITI தேர்ச்சி பெற்ற 18 – 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். இதற்கு ₹18,000 – ₹63,200 வரை சம்பளம் வழங்கப்படும். விண்ணப்பிக்க கடைசி நாள்: நவ.24. இது குறித்து மேலும் அறிய & விண்ணப்பிக்க இங்கே கிளிக் செய்யவும். ஷேர் பண்ணுங்க!


