News November 1, 2025
திண்டுக்கல்: ரயில்வேயில் 8,850 பணியிடம்! ரூ.35,000 சம்பளம்

ரயில்வே ஆட்சேர்ப்பு வாரியம்(RRB)!
1)மொத்த பணியிடங்கள்: 8,850
2)கல்வித் தகுதி: 12th Pass, Any Degree.
3)சம்பளம்: ரூ.19,900 முதல் ரூ.35,400 வரை வழங்கப்படும்.
4)விண்ணப்பிக்க கடைசி நாள்: 27.11.2025.
5)ஆன்லைனில் விண்ணப்பிக்க: இங்கே <
Similar News
News November 2, 2025
திண்டுக்கல்: WhatsApp-ல் வரும் ஆபத்து.. உஷார்!

தமிழகத்தில் 2 வகை சைபா் மோசடிகள் அதிகம் நடைபெறுவது கண்டறியப்பட்டுள்ளது. முக்கியமாக, போக்குவரத்து விதிமுறை மீறியதாக போலி இ-செலான்களை What’s App வாயிலாக அனுப்பி மோசடி நடைபெறுகிறது. இ-செலான்களை வாட்ஸ்ஆப் மூலமாக அரசின் எந்த துறையும் அனுப்புவது கிடையாது. மோசடி கும்பல் வாட்ஸ்ஆப் மூலம் போலி இ-செலான்களை அனுப்பி மோசடி செய்கிறது. எனவே, உஷாராக இருக்க சைபர் கிரைம் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
News November 2, 2025
திண்டுக்கல்லில் பெண் வெட்டிக் கொலை.. இருவர் கைது

திண்டுக்கல் அருகே கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி பெண் ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் நந்தவனப்பட்டியை சேர்ந்த கலைமணி மற்றும் வினோத்குமார் ஆகிய 2 பேரை தாடிக்கொம்பு போலீசார் நேற்று கைது செய்தனர். மேலும், கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட இருவரிடமும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
News November 2, 2025
திண்டுக்கல்: இன்றைய இரவு ரோந்து காவலர்கள் விவரம்

திண்டுக்கல் மாவட்ட காவல்துறை அதிகாரியின் ரோந்து விவரம் நேற்று (நவம்பர் 1) சனிக்கிழமை இரவு 10 மணி முதல் நாளை காலை 6 மணி வரை திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதியான திண்டுக்கல் ஊடகம், திண்டுக்கல் நகர், நிலக்கோட்டை, ஒட்டன்சத்திரம், பழனி, கொடைக்கானல், வேடசந்தூர் ஆகிய பகுதிகளில் ஏதேனும் புகார் இருந்தால் மேலே கொடுக்கப்பட்டுள்ள காவல்துறை அதிகாரியின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொள்ளவும்.


