News November 1, 2025

கடலூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

image

கடலூர் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு தடையின்றி உரங்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது. அதன்படி நேற்றைய நிலவரப்படி மாவட்டத்தில் யூரியா 3,324 டன்னும், டி.ஏ.பி 1,373 டன்னும், பொட்டாஷ் 1,463 டன்னும், காம்ப்லக்ஸ் உரம் 6,262 டன்னும், சூப்பர் பாஸ்பேட் 1,358 டன்னும் என மொத்தம் 13,002 டன் உரம் இருப்பு உள்ளது என மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்தார்.

Similar News

News November 2, 2025

கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

image

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (01.11.2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

News November 1, 2025

கடலூர்: உயிரிழந்த இடத்தை பார்வையிட்ட எஸ்பி

image

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஐபிஎஸ், கடலூர் மாவட்டம் கோண்டூர் அருகே இரண்டு வாகனங்கள் மோதி 3 நபர்கள் உயிரிழந்த சம்பவ இடத்தினை, இன்று நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு காவல் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். உடன் காவல் துறையினர் உள்ளனர்.

News November 1, 2025

கடலூர்: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்!

image

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <>tabcedco.net<<>> என்ற இணையதளத்தில் விண்ணப்பித்து கொள்ளலாம். குறிப்பு: கடனுதவி பெற மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் உறுப்பினராக இருக்க வேண்டும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!

error: Content is protected !!