News November 1, 2025

சென்னை: பூஜை அறையில் தீ விபத்து

image

சென்னை பெரம்பூர் வெற்றி நகர் பகுதியில் வசிக்கும் 85 வயது வசந்தா என்ற மூதாட்டி, பூஜை அறையில் விளக்கு ஏற்றும் போது சேலையில் தீப்பிடித்து 42% தீக்காயங்களுடன் படுகாயமடைந்தார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் தீயை அணைத்து மீட்டு கேஎம்சி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து திருவிக நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Similar News

News November 2, 2025

சென்னையில் வரப்போகும் RRTS ரயில்கள்

image

சென்னையில் மெட்ரோவிற்கு இடையே இன்னொரு பக்கம் RRTS ரயில் சேவையும் வர உள்ளது. இதற்கான சர்வே பணிகள் தொடங்கி உள்ளன. பரந்தூரைச் சென்னையின் மையப்பகுதியுடன் இணைக்கும் வகையில் இந்த ஆர்ஆர்டிஎஸ் ரயில் கொண்டு வரப்பட உள்ளது. மொத்தமாக மூன்று வழித்தடங்களில் உருவாக்கிட விரிவான சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் டெண்டர் விடப்பட்டு உள்ளது.

இன்று களைகட்டப்போகும் மெரினா!

image

சென்னை மெரினா கடற்கரையில் விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை தினங்களில் ஒவ்வொரு வாரமும் பல்வேறு பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில், இன்று (நவ.2) மாலை 5.00 மணிக்கு மயிலாட்டம், ஒயிலாட்டம், சாட்டைக்குச்சி ஆட்டம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளது. மெரினா போக நினைக்கும் உங்க நண்பர்களுக்கு ஷேர் செய்து தெரியப்படுத்துங்க.

error: Content is protected !!