News November 1, 2025
கடலூர் அருகே ரயில்வே கேட் மூடல்

கடலூர் மாவட்டம், நெல்லிக்குப்பம் ஆலை ரோடு 147-வது எண் கொண்ட ரயில்வே கேட் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று (நவ.1) காலை 9மணி முதல் மாலை 5 மணி வரையிலும், அதுபோல நவ.02-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை ரயில்வே கேட் மூடப்படும் என ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது. எனவே வாகன ஓட்டிகள் மாற்று பாதைகளை பயன்படுத்தி கொள்ள கேட்டுக் கொள்ளப்ட்டுள்ளனர்.
Similar News
News November 2, 2025
கடலூர்: ரோந்து செல்லும் அதிகாரிகள் விவரம்

கடலூர் மாவட்ட காவல்துறை சார்பில் மாவட்டத்தில் தினந்தோறும் இரவு ரோந்து பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில் (01.11.2025) இரவு கடலூர் மாவட்டத்தில் கடலூர் உட்பட சிதம்பரம், விருத்தாசலம், நெய்வேலி, சேத்தியாத்தோப்பு, பண்ருட்டி, திட்டக்குடி ஆகிய இடங்களில் ரோந்து செல்லும் காவல் அதிகாரிகள் தொலைபேசி எண்கள் கடலூர் மாவட்ட காவல் துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
News November 1, 2025
கடலூர்: உயிரிழந்த இடத்தை பார்வையிட்ட எஸ்பி

கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் ஐபிஎஸ், கடலூர் மாவட்டம் கோண்டூர் அருகே இரண்டு வாகனங்கள் மோதி 3 நபர்கள் உயிரிழந்த சம்பவ இடத்தினை, இன்று நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் இச்சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு காவல் அதிகாரிகளுக்கு பல்வேறு அறிவுரைகள் வழங்கினார். உடன் காவல் துறையினர் உள்ளனர்.
News November 1, 2025
கடலூர்: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <


