News November 1, 2025

வீட்டை சுத்தம் செய்யும்போது கிடைத்த ₹2.5 கோடி ஷேர்

image

‘திண்ணையில் கிடந்தவனுக்கு திடுக்குனு வந்ததாம் கல்யாணம்’ என்ற பழமொழிக்கு ஏற்ற சம்பவம் ஒன்று குஜராத்தில் நடந்துள்ளது. தாத்தா இறந்த பிறகு, வீட்டை சுத்தம் செய்த பேரனுக்கு ₹2.5 கோடிக்கான பங்கு சான்றிதழ்கள் கிடைத்தது. தாத்தா உயிலில் சொத்துகளை பேரன் பெயரில் எழுதி வைத்தாலும், தனக்கும் பங்கு வேண்டும் என தாத்தாவின் மகன் கோருகிறார். பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படாததால், இருவரும் கோர்ட்டை நாடியுள்ளனர்.

Similar News

News November 2, 2025

மயிலாடுதுறை: மானியத்துடன் மின்மோட்டார் வேண்டுமா?

image

விவசாயிகளுக்கு 50% மானியத்துடன் கூடிய மின்மோட்டார் மற்றும் பம்புசெட்டுகள் பெறுவதற்கு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. புதிதாக வாங்கப்படும் மின் மோட்டார்களின் மொத்த விலையில் ரூ.15,000/-அல்லது 50% மானியமாக வழங்கப்படும். இதற்கு விண்ணப்பிக்க இங்கே <>கிளிக்<<>> செய்து Apply செய்யவும். மேலும் விபரங்களுக்கு வட்டார வேளாண்மைப் பொறியியல் துறை அலுவலகத்தை நேரில் அணுகவும். தகவலை ஷேர் பண்ணுங்க!

News November 2, 2025

உலகக்கோப்பை ஃபைனல்: இந்தியா பேட்டிங்

image

மகளிர் ODI கிரிக்கெட் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில், இந்தியா முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. மழை காரணமாக டாஸ் போட தாமதமான நிலையில், தற்போது போடப்பட்டுள்ளது. இதில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்க அணி, பவுலிங்கை தேர்வு செய்துள்ளது. ஏற்கெனவே லீக் போட்டியில் தோற்றதற்கு, இன்றைய ஃபைனலில் இந்தியா, தென்னாப்பிரிக்க அணியை பழிதீர்க்குமா என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

News November 2, 2025

அவருக்காக கையை வெட்டிக் கொள்ளவும் ரெடி: பிரியா மணி

image

மணிரத்னம் படத்தில் நடிக்க அழைப்பு வந்தால், அதற்காக தன் கையை வெட்டிக் கொள்ளவும் ரெடியாக இருப்பதாக நடிகை பிரியா மணி தெரிவித்துள்ளார். ஏற்கெனவே மணிரத்னத்தின் ‘ராவணன்’ படத்தில் அவர் நடித்துள்ளார். இந்நிலையில், பேட்டி ஒன்றில் மணிரத்னம் தனக்கு மிகவும் பிடித்தமான இயக்குநர் எனக் கூறியுள்ள அவர், மணிரத்னம் படத்தில் நடிப்பது ஆசிர்வாதம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!