News November 1, 2025
திருச்சி: போதை பொருட்கள் விற்ற 5 பேர் கைது

திருச்சி அரியமங்கலம் பகுதியில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்பனை அதிகரித்துள்ளதாக எழுந்த புகாரை தொடர்ந்து, அரியமங்கலம் காவல் ஆய்வாளர் ரமேஷ் தலைமையிலான போலீசார் நேற்று தீவிர விசாரணை நடத்தினர். அதில் போதை மாத்திரைகள் மற்றும் ஊசிகள் விற்ற அரியமங்கலத்தை சேர்ந்த சஞ்சய் (22), ஜாகிர் உசேன் (22), ரியாஸ் அகமது (26), முகமது அப்துல்லா (28), சந்தோஷ்(19 ) ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
Similar News
News November 2, 2025
சிறுகமணியில் காளான் வளர்ப்பு கட்டணப் பயிற்சி

சிறுகமணி வேளாண்மை அறிவியல் நிலையத்தில், காளான் வளர்ப்பு குறித்த கட்டணத்துடன் கூடிய சான்றிதழ் பயிற்சி நவ.6ம் தேதி காலை 9.30 – மாலை 5 மணி வரை நடக்கிறது. இதில், பல்வேறு வகை காளான்களை கண்டறிதல், வளர்ப்பு, நிர்வாகம், காளான் வளர்ப்பு தொழில் முனைவோர்களின் அனுபவ உரை, சந்தை தகவல், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிப்பு குறித்து பயிற்சி அளிக்கப்படும் என திட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜாபாபு தெரிவித்துள்ளார்.
News November 1, 2025
திருச்சி: கறவை மாடு வாங்க ரூ.1.2 லட்சம் கடன்!

தமிழக அரசின் TABCEDCO மூலம் ஒரு பயனாளிக்கு, 2 கறவை மாடுகள் வாங்க ரூ.1,20,000 கடனுதவி வழங்கப்படுகிறது. இந்த கடனை திருப்பி செலுத்த 3 ஆண்டுகள் கால அவகாசம் உண்டு. இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற விரும்புவோர் <
News November 1, 2025
திருச்சி: ரயில்வேயில் வேலை

ரயில் இந்தியா தொழில்நுட்ப மற்றும் பொருளாதார சேவை (RITES) நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
1. வகை: பொதுத்துறை
2. பணியிடங்கள்: 600
3. சம்பளம்: ரூ.29,735
4. கல்வித் தகுதி: Diploma
5. வயது வரம்பு: 18-40(SC/ST-45, OBC-43)
6.கடைசி தேதி: 12.11.2025
7. ஆன்லைனில் விண்ணப்பிக்க:<
8.இந்த தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க.


