News November 1, 2025
நெல்லை மாவட்டத்தில் இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்

அம்பாசமுத்திரம் புறவழிச் சாலையை இன்று பகல் 10:30 மணிக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காணொளி மூலம் திறந்து வைக்கிறார். பிசான பருவ சாகுபடிக்காக இன்று பகல் 11 மணிக்கு பாவநாசம் அணையில் இருந்து நீர் திறக்கப்படுகிறது.
மணிமுத்தாறு தூங்கப் போதையில் சுற்றுச்சூழல் மற்றும் சாகச சுற்றுலா அமைக்கும் பணிகளுக்காக பூமி பூஜை நிகழ்வு இன்று பகல் 12 மணிக்கு நடக்கிறது.
Similar News
News November 2, 2025
நெல்லை: ரயிலில் பயணிக்கும் பெண்கள் கவனத்திற்கு!

நெல்லை மக்களே; ரயிலில் தனியாக பயணிக்கும் பெண்கள், ரயில்களில் அல்லது ரயில் நிலையங்களில் பாலியல் சீண்டல்களை எதிர்கொண்டால் 9962500500 என்ற எண்ணுக்கு உடனே அழைக்கவும். ரயில்வே காவல் உதவி எண் 1512 எண்ணுக்கும் தொடர்பு கொள்ளலாம். தனியாக செல்லும் பெண்கள் இந்த நம்பர்களை உங்கள் மொபைலில் கட்டாயம் வைத்து கொள்ளுங்கள். உங்கள் தோழிகளுக்கு ஷேர் பண்ணுங்க
News November 2, 2025
நெல்லை – மந்திராலயம் சிறப்பு சுற்றுலா ரயில் அறிவிப்பு

நெல்லையிலிருந்து நவ.9 அன்று நாசிக், சீரடி, சிங்கனாப்பூர், பண்டரிபுரம், மந்திராலயம் ஆகிய இடங்களுக்கு ஐஆர்சிடிசி சிறப்பு “பாரத் கௌரவ்” சுற்றுலா ரயில் இயக்கப்படுகிறது. இந்த சிறப்பு ரயிலில் செல்பவர்கள் சுற்றுலா தலங்களை பார்வையிட தனி போக்குவரத்து வசதி, தென்னிந்திய உணவு, பாதுகாப்பு வசதிகள் செய்து தரப்படும். தற்போது இதற்கான முன்பதிவு நடைபெறுகிறது என பொது மேலாளர் ராஜலிங்கம் தெரிவித்துள்ளார்.
News November 2, 2025
நெல்லை: CM Cell-ல் புகார் பதிவு செய்வது எப்படி?

1.முதலில் http://cmcell.tn.gov.in என்ற இணையதளத்திற்கு செல்லுங்கள்
2. பின்னர் ‘புதிய பயனாளர் பதிவு’ என்பதை க்ளிக் செய்து, உங்களுக்கான ID-ஐ உருவாக்க வேண்டும்.
3. இதனை தொடர்ந்து கோரிக்கை வகை என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, உங்கள் கோரிக்கையை பதிவு செய்யுங்கள்.
4. பின்னர் ‘track grievance’ என்ற ஆப்சனை கிளிக் செய்து, உங்க புகாரின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம். எல்லோரும் தெரிஞ்சிக்கட்டும் SHARE பண்ணுங்க


