News November 1, 2025

தேனி: டிப்பர் லாரி மோதி கோர விபத்து ஒருவர் படுகாயம்

image

ஆண்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜாராம் (55). இவர் நேற்று (அக்.31) அப்பகுதியில் உள்ள டீக்கடையின் முன்பாக ஓரமாக நின்று இருந்து உள்ளார். அப்பொழுது அவர் வழியாக ராஜேந்திரன் என்பவர் ஒட்டி டிப்பர் லாரி ராஜாராம் மீது மோதியது. இந்த விபத்தில் அவர் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் விபத்து குறித்த ஆண்டிப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை.

Similar News

News November 2, 2025

தேனி: ஊராட்சியில் வேலை.. APPLY செய்வது எப்படி?

image

தேனி மாவட்டத்தில் 20 கிராம ஊராட்சி செயலாளர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 10th படித்த 18 வயது நிரம்பியவர்கள் முதலில் <>இங்கு க்ளிக் <<>>செய்து மதுரைக்கான விண்ணப்பத்தை படிக்கவும். பின்னர் கிழே APPLY தேர்வை கிளிக் செய்ய வேண்டும். அதில், உங்கள் சுய விவரங்கள், சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். கடைசி நாள்: நவ. 9; சம்பளம்: ரூ.15,900 – ரூ.50,400. இந்த நல்ல வாய்ப்பை எல்லோருக்கும் SHARE பன்னுங்க.

News November 2, 2025

தேனி: தலைமறைவான குற்றவாளிக்கு 10 ஆண்டு சிறை

image

தேனி மாவட்டத்தை சேர்ந்த 14 வயது சிறுமியை 2017-ல் சிறுமியின் உறவினரான சிவராஜ் (41) என்பவர் திருமணம் செய்வதாக கூறி பலாத்காரம் செய்துள்ளார். போலீசார் அவரை கைது செய்த நிலையில், அவர் ஜாமீனில் வெளிவந்து தலைமறைவானார். அவரை கடந்த ஏப்ரலில் பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக தேனி போக்சோ நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் நேற்று (நவ. 1) சிவராஜூக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

News November 2, 2025

தேனியில் நாய் கடியால் 10,000 பேர் பாதிப்பு

image

தேனி மாவட்டம் போடி அரசு மருத்துவமனைக்கு நாய் கடியால் ஆண்டுக்கு 1,750 பேர் சிகிச்சை பெற்று செல்கின்றனர். இதே போல் பெரியகுளம், கம்பம், சின்னமனுார், உத்தமபாளையம், ஆண்டிபட்டி, தேனி அரசு மருத்துவக் கல்லூரி ஆகியவற்றில் ஆண்டுக்கு 10,000 பேர் நாய் கடியால் பாதித்து சிகிச்சை பெற்று செல்கின்றனர். கால்நடைத்துறை 2022-ன் கணக்கின்படி மாவட்டத்தில் 25,000 தெரு நாய்களும், 15,000 வளர்ப்பு நாய்கள் உள்ளதாக தகவல்.

error: Content is protected !!