News November 1, 2025
சூர்யாவுக்கு ஜோடியாக நடிக்க ஆசை: தன்யா

சில படங்களில் கதாநாயகிகளை விட, அவர்களுடைய தோழிகளாக வரும் துணை நடிகைகள் கவனம் ஈர்ப்பர். அப்படி, ‘ஏழாம் அறிவு’ படத்தில் ஸ்ருதிஹாசனின் தோழியாக வந்தவர் தன்யா பாலகிருஷ்ணா. இவர் சமீபத்தில் அளித்த நேர்காணல் ஒன்றில், வாய்ப்பு கிடைத்தால் சூர்யா, பவன் கல்யாண், ரன்பீர் கபூர் ஆகியோருடன் நடிப்பேன் என்று தனது விருப்பத்தை தெரிவித்துள்ளார். சூர்யாவுடன் நடித்திருந்தாலும், சூர்யாவுக்கு ஜோடியாக அவர் நடிக்கவில்லை.
Similar News
News November 2, 2025
Co-Star மீது புகாரளித்த Stranger Things பிரபலம்

ஸ்ட்ரேஞ்சர் திங்ஸ் தொடரில் El கேரக்டரில் நடித்த மில்லி பாபி ப்ரவுன், டேவிட் ஹார்பர் மீது bullying, harassment குற்றச்சாட்டுகளை முன்வைத்ததாக தகவல் கசிந்துள்ளது. இறுதி சீசன் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன், அவர் இதுகுறித்து NETFLIX-யிடம் புகார் அளித்திருக்கிறார். இதன் மீதான விசாரணை மாதக்கணக்கில் நடந்ததாக கூறப்படுகிறது. இது பாலியல் ரீதியான குற்றச்சாட்டு இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News November 2, 2025
குறுக்கு வழியில் வெற்றி பெற முயற்சி: செல்வப்பெருந்தகை

SIR தொடர்பான அனைத்துக் கட்சி கூட்டம், CM ஸ்டாலின் தலைமையில் நடைபெற்றது. இதில் 40-க்கும் மேற்பட்ட கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். இதில் பேசிய தமிழக காங்., தலைவர் செல்வப்பெருந்தகை, நியாயமான முறையில் வெற்றி பெற முடியாது என்பதால் தேர்தல் ஆணையத்தை பயன்படுத்தி குறுக்கு வழியில் வெற்றி பெற பாஜக முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டினார்.
News November 2, 2025
ஓடும் ரயிலில் பயணிகளுக்கு கத்திக்குத்து!

பிரிட்டனின் கேம்பிரிட்ஜ் அருகே ஹண்டிங்டன் ரயிலில் சென்றுகொண்டிருந்த பயணிகள் மீது சரமாரியாக கத்திகுத்து தாக்குதல் நிகழ்ந்துள்ளது. இந்த கொடூர சம்பவத்தால் பலத்த காயங்களுடன் 10 பேர் ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சந்தேகத்தின் பேரில் 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர். ரயிலில் நடந்த கொடூரமான சம்பவம் மிகவும் கவலையளிக்கிறது என UK PM கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.


