News October 30, 2025
மயிலாடுதுறை மக்களுக்கு எச்சரிக்கை

மயிலாடுதுறை மாவட்ட வேலை தேடும் இளைஞர்கள் வெளிநாட்டில் வேலை தொடர்பாக இணையதளங்களில் வரும் போலி விளம்பரங்கள் மற்றும் குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம். விளம்பரங்களை நம்பி உங்களது பணத்தை இழக்க நேரிடும். எனவே எச்சரிக்கையாக இருக்கும்படி மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Similar News
News November 2, 2025
மயிலாடுதுறை: கர்ப்பிணிகளுக்கு ரூ.18,000 நிதியுதவி

தமிழக அரசு சார்பில் கர்ப்பிணி பெண்களின் நலன் கருதி, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி’ எனும் அருமையான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் கர்ப்பிணிகளுக்கு 3 தவணைகளாக ரூ.14,000 நிதியுதவியும், ரூ.4,000 மதிப்புள்ள ஊட்டச்சத்து பெட்டகமும் வழங்கப்படுகிறது. திட்டத்தில் பயன்பெற விரும்பும் கர்ப்பிணிகள் <
News November 2, 2025
மயிலாடுதுறை: மூதாட்டியிடம் 13 சவரன் நகை பறிப்பு

மயிலாடுதுறை கூறைநாடு அழகப்ப செட்டி தெருவை சேர்ந்தவர் சுசீலா(75). இவர் தனது வீட்டில் அருகே உள்ள கோயிலுக்கு சென்று திரும்பும்போது அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் 3 பேர், அவரிடமிருந்து 13 சவரன் நகையை பறித்து சென்றுள்ளனர். இதுக்குறித்து அளித்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த மயிலடுதுறை காவல் நிலைய போலீசார் சிசிடிவி கேமரா அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 2, 2025
மயிலாடுதுறை: மாவட்ட காவல்துறை எச்சரிக்கை

பொதுமக்கள் தங்களது தொலைபேசி எண்ணிற்கு பரிசு தொகை கிடைத்திருப்பதாக வரும் எந்த ஒரு குறுஞ்செய்திகளையும் நம்பி ஏமாற வேண்டாம். இந்த குறுஞ்செய்தியில் உள்ள லிங்கை கிளிக் செய்தால் உங்களது பணம் அல்லது தனிப்பட்டதகவல்கள் திருடுபோக வாய்ப்புள்ளது. எனவே பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி, மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை அறிவுறுத்தியுள்ளது. மேலும் சைபர்குற்றங்கள் குறித்து 1930ல் புகார் தெரிவிக்கலாம்.


