News October 17, 2025
திருப்பத்தூர் அருகே புள்ளி மான் பலி

சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர், வேட்டங்குடி வன பகுதிகளில் புள்ளளி மான்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது. இந்நிலையில் நீர் நிலைகளில் தண்ணீர் அருந்த சாலையை கடக்கும் பொழுது விபத்துக்குள்ளாகிறது. திருப்பத்தூர் அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் புள்ளி மான் உயிரிழந்தது. இதை கண்டவர்கள் சிவகங்கை வனத்துறைக்கு அறிவித்து இறந்த புள்ளி மானை அகற்ற தெரிவித்துள்ளார்கள்.
Similar News
News December 9, 2025
சிவகங்கை: இலவச தையல் மிஷின் – ஆட்சியர் அழைப்பு!

சிவகங்கை மாவட்டம், தகுதியுடைய முன்னாள் படைவீரர் மனைவி / கைம்பெண் மற்றும் திருமணமாகாத மகள்கள் ஆகியோர் இலவச தையல் இயந்திரம் பெறுவதற்கு வருகின்ற 15.12.2025 ஆம் தேதிக்குள் உரிய ஆவணங்களுடன் முன்னாள் படைவீரர் நல உதவி இயக்குநர் அலுவலகத்தில் நேரில் விண்ணப்பித்து பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி இன்று தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
சிவகங்கையில் கலெக்டர் முக்கிய அறிவிப்பு

சிவகங்கை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் வருகின்ற 10.12.25 (புதன்கிழமை) அன்று முற்பகல் 10.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெறவுள்ளது. மாவட்டத்தின் அனைத்துத்துறை உயர் அலுவலர்கள் பங்கேற்கும் இக்கூட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் உள்ள விவசாய பெருமக்கள் கலந்து கொண்டு விவசாயம் சார்ந்த குறைகளைத் தெரிவித்து அதனை நிவர்த்தி செய்து கொள்ளுமாறு மாவட்ட ஆட்சியர் பொற்கொடி தெரிவித்துள்ளார்.
News December 9, 2025
சிவகங்கை: SBI வங்கியில் வேலை., தேர்வு இல்லை! APPLY NOW

சிவகங்கை மக்களே, ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் காலியாக உள்ள Customer Relationship Executive 284 பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகின. 20 – 35 வயதுட்பட்ட ஏதாவது ஒரு டிகிரி முடித்தவர்கள் டிச. 23க்குள்<


