News October 14, 2025
அரூருக்கு வந்த திரைப்பட இயக்குநர்

அரூரில் நேற்று தண்டகாரண்யம் திரைப்படத்தின் திறனாய்வு & கலந்துரையாடல் கூட்டம் அம்பேத்கர் நகர் அறிவக அறக்கட்டளை சார்பில் நடைபெற்றது. இதில் அப்படத்தின் இயங்குனர் அதியன் ஆதிரை, கலை இயக்குநர் த.ராமலிங்கம், ஒளிப்பதிவாளர் பிரதீப் காளிராஜா ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுக்கு திமுக இளைஞரணி மாவட்ட துணை அமைப்பாளர் கோட்டீஸ்வரன் நேரில் சந்தித்து மரியாதை செலுத்தினார்.
Similar News
News November 12, 2025
தருமபுரி ஆட்சியரின் முக்கிய அறிவிப்பு!

இந்திய தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி தருமபுரி மாவட்டத்தில் 5 சட்ட மன்ற தொகுதிகளின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் கடந்த 04.ஆம் தேதி முதல் துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் மாவட்டத்தில் உள்ள 12,85,432 வாக்காளர்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு வருகிறது. விண்ணப்பம் நிரப்புவதில் சந்தேகம் இருந்தால் அதிகாரிகளை தொடர்பு கொள்ள தொடர்பு எண்கள் மாவட்ட ஆட்சியர் சதீஷ் அறிவித்துள்ளார்.
News November 12, 2025
மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பேரணி கலெக்டர் துவக்கம்!

தருமபுரி நகர பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வுப் பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் சதீஸ் இன்று (நவ.12) கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் தருமபுரி நகர மன்ற தலைவர் லட்சுமி நாட்டான் மாது, அரசுத் துறை அலுவலர்கள் பள்ளி மாணவிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
News November 12, 2025
தருமபுரி: தேர்வு, நேர்காணல் இல்லாமல் மத்திய அரசு வேலை!

India Post Payments Bank-ல் ஜூனியர் ஆசோசியட், அசிஸ்டண்ட் மேனேஜர் உள்ளிட்ட பதவிகளில் மொத்தம் 309 காலிப்பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு, பட்டப்படிப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள். இதற்கு 20 முதல் 35 வயதுடையவர்கள், <


