News October 11, 2025

BREAKING: மதுரையில் பெயர் மாற்றம் செய்யப்பட்ட 2 ஊர்கள்

image

மதுரை, மேலூர் ஒன்றியத்திலுள்ள சாந்தமங்கலம் ஊராட்சியில் இன்று காலை (11-10-2025) கிராமசபை கூட்டம் நடைபெற்றது. பல்வேறு குடிநீர், தெரு விளக்குகள், குப்பை அகற்றுதல், சாலை வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து பேசப்பட்ட நிலையில்,
ஒத்தச்சேரி என்ற பெயரை ஒத்தப்பட்டி எனவும் அய்யனார் காலனியை மாற்றி அய்யனார்புரம் எனவும் மாற்றி கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Similar News

News December 9, 2025

மதுரையில் ஒரே நாளில் 300 பேர் கைது

image

திருப்பரங்குன்றம் மலை மீதுள்ள தீபத்துாண் மீது கார்த்திகை தீபம் ஏற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. அதை நிறைவேற்றாமல் முருக பக்தர்களை அவமதித்ததாக, தமிழக அரசை கண்டித்து ஹிந்து முன்னணி சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. எழுமலையில் நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் பெண்கள் உட்பட 300 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்கள் தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டனர்.

News December 8, 2025

மதுரை: விபத்தில் கணவன் கண் முன்னே மனைவி பலி

image

மதுரை, பரவையைச் சேர்ந்த கார்த்திக்(36) மற்றும் அவரது மனைவி சங்கீதா(21) இருவரும் சேர்ந்து டூவீலரில் மேலூர் – அழகர்கோவில் சாலையில் நேற்று சென்று கொண்டிருந்தனர்.
அ.வல்லாளப்பட்டி அருகே வந்து கொண்டிருந்த போது, பின்னால் அமர்ந்து இருந்த சங்கீதா தடுமாறி விழுந்ததில் தலையில் அடிபட்டது. மதுரை அரசு மருத்துவமனை கொண்டு செல்லப்பட்ட அவர் இறந்ததை மருத்துவர்கள் உறுதி செய்தனர். மேலவளவு போலீசார் விசாரிக்கின்றனர்.

News December 8, 2025

மதுரை: VOTER ID வைத்திருப்போர் கவனத்திற்கு!

image

மதுரை மக்களே, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் வாக்காளர் அட்டையில் உங்கள் பெயர், EPIC எண், பாலினம், முகவரி ஆகியவை சரியாக உள்ளதா என தெரிந்துகொள்ள அலுவலகங்களுக்கு இனி அலைய வேண்டாம். e<>lectoralsearch.eci.gov.in<<>> என்ற இணையதளத்தில் சென்று உங்கள் தரவுகளை வீட்டிலிருந்தே சரிபார்த்துக் கொள்ளலாம். இதன் மூலம் உங்கள் பெயர் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கபடுவதை தடுக்கலாம். SHARE

error: Content is protected !!