News October 10, 2025

கரும்பு விவசாயிகளுடான முத்தரப்பு கூட்டம்

image

கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கரும்பு விவசாயிகளுடனான முத்தரப்பு கூட்டம் கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் தலைமையில் இன்று அக்.10-ம் தேதி நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மாவட்ட வேளாண் அதிகாரிகள் மற்றும் கரும்பு விவசாயிகள் மற்றும் அரசின் துறை சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Similar News

News December 7, 2025

கள்ளக்குறிச்சியில் நாள் ஒன்றுக்கு 1.04 லட்சம் மகளிர் பயணம்!

image

அரசு நகர பஸ்களில் பெண்களுக்கு கட்டணமில்லா பயணத் திட்டத்தை 2021ம் ஆண்டு ஜூன் மாதம் தமிழக முதல்வர் அறிமுகப்படுத்தினார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் இத்திட்டத்தின்கீழ் ஒரு நாளைக்கு, 1.04 லட்சம் மகளிர் பயணம் செய்கின்றனர். அதன்படி கடந்த நான்கரை ஆண்டுகளில் மட்டும் அரசு நகர பஸ்களில், 11.49 கோடி முறை மகளிர் கட்டணமில்லா பயணம் மேற்கொண்டுள்ளனர் என மாவட்ட நிர்வாகம் தகவல்.

News December 7, 2025

தாயுமானவர் திட்டத்தில் 28,133 அட்டைதாரர்கள் பயன்

image

தமிழக அரசு வயது முதிர்ந்தவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி ரேஷன் கார்டு குடும்பத்தினர் வீட்டிற்கே சென்று, ரேஷன் பொருட்கள் வழங்கும் முதல்வரின் தாயுமானவர் திட்டம் துவங்கி உள்ளது. இத்திட்டத்தின்படி மாதத்தின் 2வது வார சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 766 ரேஷன் கடைகளில் உள்ள 28,133 ரேஷன் கார்டுகளின் வீடுகளுக்கு சென்று ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

News December 7, 2025

கள்ளக்குறிச்சி: தமிழ் புதல்வன் திட்டத்தில் 10,656 மாணவர்கள்

image

தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 6 முதல் பிளஸ் 2 வரை அரசு பள்ளிகளில் படித்து மேற்படிப்பில் சேரும் அனைத்து மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. அதன்படி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின்கீழ் 10,656 மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1,000 உதவித்தொகை பெற்று வருகின்றனர். எனவே இத்திட்டத்தினை உயர்கல்வி பயிலும் உதவித்தொகை பெற்று பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சியர் தெரிவிப்பு.

error: Content is protected !!