News October 10, 2025
விழுப்புரம் எம்.பி மத்திய அமைச்சருக்கு கடிதம்!

விழுப்புரம் எம்பி ரவிகுமார், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு நேற்று (அக்.09) கடிதம் எழுதியுள்ளார். அதில், மாற்றுத் திறனாளிகள் சிறுரக கார் வாங்க 10% GST வரி சலுகை வழங்கப்பட்டு வந்தது. 28% GST வரி இருந்தபோது அவர்களுக்கு 18% விதிக்கப்பட்டது. தற்போது GST வரிகளில் மாற்றம் செய்யப்பட்டு சிறுரக கார்களுக்கு 18% வரி விதிக்கப்பட்டுள்ளதால், மாற்றுத்திறனாளிகளுக்கு 10% GST வரி விதிக்க வலியுறுத்தியுள்ளார்.
Similar News
News November 14, 2025
விழுப்புரம் : ஹவுஸ் ஓனர் தொல்லையா? உடனே CALL

1) விழுப்புரத்தில் வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
2)வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது.
3)உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம்.(SHARE IT)
News November 14, 2025
விழுப்புரம்: சர்க்கரை நோயா? சிகிச்சை இலவசம்!

சர்க்கரை நோயால், கால்களில் நீண்ட நாட்களாக புண், வீக்கம் என அவதியடைந்து வருகிறீர்களா..? அரசின் ‘பாதம் காக்கும் திட்டம்’ மூலம் நீங்கள் இலவசமாக சிகிச்சை பெறலாம்.
1) தமிழக அரசின் ஆரம்ப சுகாதார நிலையத்திலேயே இந்த புண்களுக்கான சிகிச்சை வழங்கப்படும்.
2) அறுவை சிகிச்சை கூட இலவசமாக வழங்கப்படும்.
3) உடனே அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள ‘Diabetic Foot Cinic’ -ஐ அணுகவும். (SHARE IT)
News November 14, 2025
விழுப்புரம் விவசாயிகளின் கவனத்திற்கு!

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பயிர் காப்பீடு செய்ய நாளை(நவ.15) இறுதி நாள் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பயிர் இழப்பை ஈடுசெய்ய மாவட்டத்தில் 25-26ஆம் ஆண்டு பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. நெல், உளுந்து, வேர்க்கடலை, எள், கரும்பு ஆகிய பயிர்களுக்கு அடங்கல், சிட்டா, வங்கி கணக்கு, ஆதாருடன் விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.


