News October 7, 2025
விழுப்புரம் : ஹோட்டலில் தரமற்ற உணவா? தயங்காம சொல்லுங்க!

தமிழகத்தில் உணவுப் பாதுகாப்பு துறை பல இடங்களில் தீவிர சோதனையில் ஒரு பக்கம் ஈடுபட்டு வருகிறது. ஆனால் மறுபக்கம் தரமற்ற உணவு, கலப்படப் பொருட்களை கொண்டு சமைத்தல் போன்ற புகார் தொடர்ந்து எழுகிறது. சமீப காலமாக உணவில் தேரை, பல்லி, பாம்பு இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இது போன்ற பிரச்சனைகளுக்கு உடனடியாக 9444042322 என்ற Whatsapp எண்ணில் புகார் தெரிவிக்கலாம். ஷேர் பண்ணுங்க
Similar News
News November 14, 2025
விழுப்புரம்: பட்டாவில் பெயர் மாற்றமா..?

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!
News November 14, 2025
விழுப்புரத்தில் வீடு புகுந்து கொள்ளை ; போலீஸ் வலை!

விழுப்புரம்: ஆடல் நகர் பகுதியில் பாண்டியன் எனபவர் வீட்டின் பூட்டை உடைத்து மர்மநபர்கள் நுழைந்து ஒன்றரை கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் லேப்டாப்பை திருடிச் சென்றனர். வீட்டை பூட்டிவிட்டு கடலூரில் உறவினர் வீட்டிற்கு சென்றிருந்த அவர் திரும்பியபோது இது தெரிய வந்தது. இதுகுறித்து விழுப்புரம் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
News November 14, 2025
இந்திய அளவில் கலக்கிய விழுப்புரம் காவலர்!

ஜம்மு – காஷ்மீரில் நடைபெற்ற அகில இந்திய காவல்துறை விளையாட்டு போட்டியில் விழுப்புரம் மாவட்ட முதல்நிலைக் காவலர் வருண்குமார் கராத்தே பிரிவில் மூன்றாம் இடம் பெற்று வெண்கல பதக்கம் வென்றார். கடந்த மாதம் 8 முதல் 16 வரை நடந்த போட்டியில் அவர் சிறப்பாக செயல்பட்டார். சாதனை புரிந்த வருண்குமாரையும், அவரது பயிற்சியாளர் குணசேகரனிடம் எஸ்.பி சரவணன் பாராட்டினார்.


