News October 5, 2025
விழுப்புரம்: BE போதும், லட்சத்தில் சம்பளம்!

மத்திய அரசு நிறுவனமான SECI-ல் கூடுதல் ஜென்ரல் மேனேஜர், டெபியூட்டி ஜென்ரல் மேனேஜர், மேனேஜர், டெபியூட்டி மேனேஜர், சீனியர் மேனேஜர், ஜூனியர் ஃபோர்மேன் பதவிகளுக்கு காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு சிவில், எலெக்ட்ரிக்கல், மெக்கானிக்கல், எலெக்ட்ரானிக்ஸ் ஆகியவற்றில் BE முடித்திருந்தால் போதும். சம்பளமாக ரூ.70,000-2,60,000 வரை வழங்கப்படும். <
Similar News
News November 14, 2025
மாரத்தான் ஓட்டத்தை துவக்கி வைத்த ஆட்சியர்

விழுப்புரம் மாவட்ட பெருந்திட்ட வளாக மைதானத்தில் கூட்டுறவுத்துறை சார்பில் 72-ஆவது அகில இந்திய கூட்டுறவு வார விழா கொண்டாடும் வகையில் இன்று (நவ.14) “மினி மாரத்தான்” போட்டியினை ஆட்சியர் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் கொடியசைத்து துவக்கி வைத்தார். உடன் விழுப்புரம் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப்பதிவாளர் ஏ.விஜயசக்தி உட்பட பலர் உள்ளனர்.
News November 14, 2025
விழுப்புரம்: லஞ்சம் கேட்டால் இதை பண்ணுங்க!

விழுப்புரம் மக்களே வருமானம், சாதி, குடிமை, குடியிருப்பு&மதிப்பீடு சான்றிதழ் வாங்க, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் விழுப்புரம் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (04146-259216) புகாரளிக்கலாம். இந்த முக்கிய தகவலை நண்பர்களுக்கும் பகிருங்கள்
News November 14, 2025
விழுப்புரம்: பட்டாவில் பெயர் மாற்றமா..?

பட்டாவில், இறந்தவர்களின் பெயர்கள் நீக்கம் அல்லது புதிய உரிமையாளர்களின் பெயர்களை சேர்க்க ஆன்லைன் வசதி அறிமுகமாகியுள்ளது. அதன்படி, உரிய ஆவணங்களுடன் eservices.tn.gov.in என்ற இணையதளம், இ-சேவை மையங்கள் அல்லது TN nilam citizen portal தளம் மூலமாக விண்ணப்பிக்கலாம். இதன் மூலம் அலைச்சல் இல்லாமல் பட்டாவில் எளிதாக பெயர் மாற்றம் செய்து கொள்ளலாம். இந்த தகவலை SHARE பண்ணுங்க!


