News September 28, 2025
வேலூர்: காவல்துறை சார்பில் விழிப்புணர்வு!

வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வுப் புகைப்படம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில், “உங்கள் வாழ்க்கை உங்கள் கைகளில் உள்ளது, போதைப்பொருட்களைத் தடுப்போம், போதைப்பொருள் இல்லா ஊரை உருவாக்குவோம்” என்ற வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன.போதைப்பொருட்களைத் தடுக்க காவல்துறை பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. எனவே, பொதுமக்களும் காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது
Similar News
News December 9, 2025
வேலூர்: கட்டட தொழிலாளி கொலை!

வேலூர்: சதுப்பேரி பகுதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி பிரேம்குமார் (34). இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த தந்தை கோட்டீஸ்வரன் (54), மகன் சக்தி (24) ஆகியோருக்கும் இடையே நேற்று(டிச.8) கைகலப்பு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், இன்று (டிச.9) ஆர்.என்.பாளையம் பஜார் வீதியில் பிரேம்குமாரை தந்தை, மகன் சேர்ந்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளனர். இதுகுறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
News December 9, 2025
வேலூர் மக்களே.., 5 ஏக்கர் நிலம் வாங்க வாய்ப்பு!

பெண்கள் சொந்த நிலம் வாங்க தமிழக அரசு அறிமுகப்படுத்திய ‘நன்னிலம்’ திட்டத்தின் கீழ் 2.5- 5 ஏக்கர் வரையிலான நிலம் வாங்க 50% மானியத்துடன் கடனுதவி வழங்கப்படுகிறது. இத்திட்டத்தில், குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்குள்ளிருக்கும் 18 – 56 வயது வரை உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விரும்புவோர் TAHDCO அலுவலகத்தில் நேரடியாக சென்றோ (அ) <
News December 9, 2025
வேலூர்: லஞ்சம் கேட்டால், உடனே CALL!

வேலூர் மக்களே.., வருமானம், சாதி, குடிமை, பட்டா, சிட்டா மாற்றம் போன்ற பல்வேறு பணிகளுக்கு நாம் கண்டிப்பாக தாசில்தார் அலுவலகத்திற்கு சென்றிருப்போம். அங்கு தாசில்தார் &அதிகாரிகள் தங்கள் பணிகளை முறையாக செய்யாமல் லஞ்சம் கேட்டால் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரியிடம் (0416-2220893) புகாரளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!


