News September 26, 2025

விழுப்புரம்: ஒரு பஃப்ஸ்! ரூ.60,040 அபராதம்!

image

திண்டிவனம் சினிமா திரையரங்கில், கொஞ்சமங்கலத்தைச் சேர்ந்த ஞானவேல் (26) என்பவருக்கு ₹30-க்கு விற்க வேண்டிய பஃப்ஸ் ₹50-க்கு விற்கப்பட்டது. இது குறித்து அவர் விழுப்புரம் மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த ஆணையம், நஷ்ட ஈடாக ₹50,000, வழக்குச் செலவாக ₹10,000, ஆகியவற்றை பாதிக்கப்பட்டவருக்கு வழங்க திரையரங்கு நிர்வாகத்திற்கு நேற்று உத்தரவிட்டது.

Similar News

News November 15, 2025

விழுப்புரம்: இரவு ரோந்து செல்லும் காவலர்கள் விவரம்

image

விழுப்புரம் மாவட்டத்தில் இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம் அல்லது 100 ஐ டயல் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் கைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது.

News November 14, 2025

விழுப்புரம் காவலர்களுக்கு எஸ்பி பாராட்டு

image

விழுப்புரம் மதுவிலக்கு அமல் பிரிவு மது விலக்கு சோதனை சாவடி மற்றும் நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் சிறப்பாக பணி புரிந்த காவலர்களை இன்று (நவ.14) நேரில் அழைத்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ப.சரவணன் பாராட்டினார். கெங்காரம்பாளையம் சோதனை சாவடியில் பணியில் இருந்த தலைமை காவலர்கள்.குணசீலன், விஜயகுமார் மற்றும் காவலர் வினோத் ஆகியோர் புதுச்சேரி மில்லி சாராயம் பறிமுதல் செய்தனர்.

News November 14, 2025

விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி ஆட்சியர் ஆய்வு

image

75 விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இராதாபுரம் கிராம நிர்வாக அலுவலகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் குறித்து ஆய்வு நடைபெற்றது. வாக்குச்சாவடி நிலை அலுவலர் செயலியில் (BLO APP) உள்ளீடு செய்யும் பணியினை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான்,அவர்கள் இன்று (நவ.14) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

error: Content is protected !!