News September 23, 2025

கரூர்: வயது வராத சிறார்களின் பெற்றோர்கள் கவனத்திற்கு!

image

சமீப காலமாக சிறுவர்கள் வாகனங்களை இயக்கி விபத்துக்குள்ளாகும் சம்பவம் அதிகரித்து வருகிறது. குடித்து விட்டு வாகனம் ஓட்டுவதை விட ஆபத்தானது சிறுவர்கள் வாகனங்களை இயக்குவது. சிறுவர்கள் வாகனம் ஓட்டினால்,
1. வாகனத்தின் பதிவுச் சான்றிதழ் ரத்து செய்யப்படும்
2.வாகனம் ஓட்டிய சிறுவர்களுக்கு ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும்
3. 25 வயது வரை ஓட்டுநர் உரிமம் பெற முடியாது
4. பெற்றோருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை (SHARE)

Similar News

News November 15, 2025

கரூர்: நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாம்

image

கரூர் மாவட்டம், இன்று (15.11.2025 ) அரவக்குறிச்சி தொகுதி, புன்னம் சத்திரம், அன்னை மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பல்வேறு சிறப்பு மருத்துவ பரிசோதனைகளை இலகுவாக சோதித்துக் கொள்ளும் வகையிலான, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ மருத்துவ பரிசோதனை முகாமநடைபெறுகிறது. இதில் நரம்பு, இதயம், கை, கால் போன்ற பல பிரச்சினைகளுக்கு தீர்வு மற்றும் மருந்துகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.

News November 14, 2025

மாற்றுத்திறத்திறனாளிகளுக்கு ஓவிய போட்டி

image

கரூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, மாற்றுத்திறத்திறனாளிகளுக்கு மாவட்ட அளவில் ஓவியப் போட்டிகள் நடைபெறுகிறது மேலும் (http://q.me-qr.com/mk9ORAPC) இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கவும். மேலும் 20.11.2025 அன்று நாரத கான சபா, திருமண மண்டபத்தில் உழவர் சந்தை அருகில், நடை பெற இருக்கிறது என மாவட்ட ஆட்சியர் மீ.தங்கவேல் தகவல் அளித்துள்ளார்.

News November 14, 2025

கரூர் மேற்கு பகுதியில் நாளை மின் தடை

image

கரூர் மின் அலுவலகத்திற்கு உட்பட்ட 11 K .V. சஞ்சய் நகர், வடிவேல் நகர், ஆண்டான் கோவில் மற்றும் மொச்ச கொட்டம் பாளையம், பவித்திரம், ஆகிய மின்பாதைகளில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் வேப்பம்பாளையம், கோவிந்தம் பாளையம், மொச்ச கொட்டாம்பாளையம், அருள் நகர், சுந்தர் நகர், ஆத்தூர் பிரிவு, செல்லராபாளையம், விசுவநாதபுரி, ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.

error: Content is protected !!